Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள்

பாகிஸ்தான் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது.

ஈரான் பாதுகாப்புப்படையில் ஈரான் புரட்சிப்படை என்ற பிரிவு உள்ளது. இந்த புரட்சிப்படை ஈரானின் நலனுக்காக வெளிநாடுகளில் பல்வேறு இராணுவ, அரசியல் ரீதியிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள உருவாக்கப்பட்டது.

இந்த புரட்சிப்படை பிரிவில் ‘குவாட்ஸ்’ என்ற சிறப்பு படை உள்ளது. இந்த குவாட்ஸ் பிரிவு வெளிநாடுகளில் உளவு, இரகசிய ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இதனிடையே, ஈரான் புரட்சிப்படையின் தளபதி குவாசம் சுலைமானி கடந்த 2020ம் ஆண்டு ஈராக்கில் அமெரிக்க படையினர் நடத்திய டிரோன் தாக்குதலில் கொல்லப்பட்டார்.

குவாசம் சுலைமானியின் நினைவு தினம் கடந்த 3ம் திகதி ஈரானின் கெர்மன் நகரில் அனுஷ்டிக்கப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அப்போது, திடீரென இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டது.

இந்த தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இதையடுத்து, ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மற்றும் ஈரானுக்கு எதிராக செயல்படும் அமைப்புகளை குறிவைத்து ஈரானின் புரட்சிப்படை தாக்குதலை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், பாகிஸ்தான் மீது ஈரான் நேற்று தாக்குதல் நடத்தியது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணம் குஹி சாப் நகரில் உள்ள ஜெய்ஷ் உல் அடெல் பயங்கரவாத குழுவை குறிவைத்து ஈரான் புரட்சிப்படை நேற்று ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் எத்தனைபேர் உயிரிழந்தனர் என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.

பாகிஸ்தானில் ஈரான் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது
செய்திகள்

கற்பிட்டியில் சட்டவிரோதமாக கொண்டுவரப்பட்ட மருந்து மாத்திரைகளுடன் ஒருவர் கைது

July 2, 2026
134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!
செய்திகள்

134 திரைப்படப் பாடல்களுக்கு தனிப்பட்ட உரிமை கோர முடியாது; இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு!

July 2, 2026
முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு
செய்திகள்

முதியோர் பராமரிப்பு இல்லங்களுக்கான உத்தரவு; செப்டம்பர் 30 வரை காலக்கெடு

July 2, 2026
அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில
செய்திகள்

அரசாங்கம் பிள்ளையான் விடயத்தில் வெளிப்படுத்தும் தகவல்கள் முற்றிலும் பொய்; உதய கம்மன்பில

July 2, 2026
அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது
செய்திகள்

அர்ச்சுனாவின் எம்.பி பதவியை கேள்விக்குள்ளாக்கிய மனுவிற்கு நீதிமன்றம் திகதியிட்டது

July 2, 2026
கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வருண ஜயசுந்தர சிஐடிக்கு அழைப்பு!

July 2, 2026
Next Post
மட்டக்களப்பில் வசிக்கும் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு 16,000 போதாது!

மட்டக்களப்பில் வசிக்கும் ஒருவருக்கு மாதம் ஒன்றிற்கு 16,000 போதாது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு