Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கைக்கு சூரியகாந்தி எண்ணெய்யை நன்கொடையாக வழங்கிய ரஷ்யா!

இலங்கைக்கு சூரியகாந்தி எண்ணெய்யை நன்கொடையாக வழங்கிய ரஷ்யா!

3 years ago
in செய்திகள்

ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான தொடர்ச்சியான ஒத்துழைப்பை பிரதிபலிக்கும் வகையில், ஐக்கிய நாடுகளின் உலக உணவுத் திட்டத்தின் மூலம் ரஷ்யாவிலிருந்து இலங்கைக்கு 1.5 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சூரியகாந்தி எண்ணெய் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலக வளாகத்தில் நேற்று (16) இலங்கை அரசாங்கத்திடம் இந்த நன்கொடை உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

2023 டிசம்பர் 30 ஆம் திகதி 117.3 மெட்ரிக் டொன் சூரியகாந்தி எண்ணெயும், 2024 ஜனவரி 04 ஆம் திகதி 13.1 மெட்ரிக் டொன் எண்ணெயும் ரஷ்ய அரசாங்கத்தால் இலங்கைக்கு வழங்கப்பட்டது, மேலும் மொத்த நன்கொடையான 130.41 மெட்ரிக் டொன் எண்ணெய் இலங்கை அரசாங்கத்துக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

இதேவேளை, இந்த வேலைத்திட்டத்தின் முதற்கட்டமாக 351.9 மெற்றிக் டொன் சூரியகாந்தி எண்ணெய் ரஷ்ய அரசாங்கத்திடம் இருந்து 2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 04 ஆம் திகதி இலங்கைக்கு வழங்கப்பட்டது.

அவசர பதிலளிப்பு திட்டத்தின் கீழ் இந்த நன்கொடை வழங்கப்பட்டுள்ளது மற்றும் நாடு முழுவதும் உள்ள குறைந்த வருமானம் மற்றும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கு நேரடியாக இது சென்றடையும். குறிப்பாக மட்டக்களப்பு, நுவரெலியா மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 8625 குடும்பங்கள் இதன் மூலம் பயனடைவார்கள்.

இலங்கையில் பொருளாதார சவால்களை எதிர்நோக்கும் மக்களின் அவசரத் தேவைகளை உணர்ந்து அவற்றிற்கு விரைவாகப் பதிலளிப்பதற்கான இந்த கூட்டு முயற்சியானது ரஷ்ய அரசாங்கத்துக்கும் இலங்கைக்கும் இடையிலான சர்வதேச உறவில் மிக முக்கியமான மைல்கல்லைக் குறிக்கிறது.

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். தகயரான், உலக உணவுத் திட்டத்தின் இந்நாட்டுப் பணிப்பாளர் ஜெரார்ட் ரெபெலோ உள்ளிட்ட அதன் அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் வெர்னான் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் மேலதிக செயலாளர் அமீர் அஜ்வாட், கொழும்பு உலக உணவுத் திட்ட ஒத்துழைப்புத் தரப்பு செயலகத்தின் பணிப்பாளர் நாயகம். எம்.எச்.ஏ.எம். ரிப்லான் உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
ஆடைகளை திருடிய பாராளுமன்ற உறுப்பினர்; குற்றத்தை ஒப்புக்கொண்டு இராஜினாமா!

ஆடைகளை திருடிய பாராளுமன்ற உறுப்பினர்; குற்றத்தை ஒப்புக்கொண்டு இராஜினாமா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு