தொடர்ச்சியாக மழை பெய்து வருகின்ற நிலையில் சாய்ந்தமருது பிரதேசத்தில் வெள்ள நீரை துரிதமாக வடிந்தோடச் செய்வதற்காக கல்முனை மாநகர சபையினால் இங்குள்ள வடிகான்கள் மீண்டும் துப்பரவு செய்யப்பட்டு வருகின்றன.
இடர் நிலைமையைக் கருத்தில் கொண்டு கல்முனை மாநகர ஆணையாளர் ஏ.எல்.எம். அஸ்மி அவர்களின் பணிப்புரையின் பேரில் பொறியியலாளர் ஏ.ஜே.ஏ.எச். ஜௌசி அவர்களின் அறிவுறுத்தல்களின் பிரகாரம் வேலைகள் அத்தியட்சகர் வி.உதயகுமரன் அவர்களின் நெறிப்படுத்தலில் இரவு பகலாக இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சுத்திகரிப்பு செய்யப்படுகின்ற வடிகான்களினுள் குப்பைகள், கற்கள் மற்றும் மண்களை கூட்டித் தள்ளுவதைக் கண்டிப்பாகத் தவிர்த்துக் கொள்ளுமாறு கல்முனை மாநகர சபை, பொது மக்களை வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளது.