பெலியத்த பகுதி ஐந்து பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் கொலைக்கு உதவிய குற்றச்சாட்டில் சந்தேகநபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த 2 சந்தேகநபர்களும் ஹெரோயின் போதைப்பொருளுடன் காலி பகுதியில் வைத்து பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
காலி பிரதேசத்தில் வசிக்கும் 25 மற்றும் 35 வயதுடைய இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்படும் போது, அவர்களிடம் இருந்து 9 கிராம் 300 மில்லி கிராம் ஹெரோயின், மோட்டார் சைக்கிள், 3 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் கூரான கத்தி என்பன காணப்பட்டன.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக காலி துறைமுக பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா உட்பட 5 பேர் கொல்லப்பட்டமை குறிப்பிடத்தக்கது.