Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா நிகழ்வு!

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் பொங்கல் விழா நிகழ்வு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட செயலகம் மற்றும் பிரதேச செயலகங்கள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்கள் என்பன இணைந்து நடாத்தும் மாவட்ட பொங்கல் விழா மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.ஜே.ஜே.முரளீதரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலக வளாகத்தில் நேற்று (30) திகதி இடம் பெற்றது.

தமிழரின் பாரம்பரியத்தை பறைசாற்றும் தைப்பொங்கல் நிகழ்வானது மாவட்ட செயலக ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்திலிருந்து சம்பிரதாய முறைப்படி புதிர் எடுத்து வரப்பட்டதனைத் தொடர்ந்து பொங்கல் நிகழ்வுகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.சுதர்சனி ஶ்ரீகாந்த், மாவட்ட பிரதம கணக்காளர் எஸ்.எம்.பஷீர், மாவட்ட செயலக பிரதம உள்ளக கணக்காய்வாளர் ஆர்.காயத்திரி, மாவட்ட செயலக கணக்காளர் எம். வினோத், மாவட்ட செயலக நிருவாக உத்தியோகத்தர் கணபதிப்பிள்ளை மதிவண்ணன், பிரதேச செயலாளர்கள், உதவி பிர தேச செயலாளர்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், விவசாய அமைப்புக்களின் பிரதிநிதிகள், மாவட்ட மட்ட சமய சமூக அமைப்புக்களின் பிரதிநிதிகள் உள்ளிட்ட மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இந்நிகழ்வில் 14 பிரதேச செயலகங்களின் ஏற்பாட்டில் 14 வகையான பொங்கல் பானைகள் பொங்கப்பட்டு, பூசை வழிபாடுகளும் இடம்பெற்றது.

இதன் போது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தின் மாணவர்களின் கண்கவர் கலை கலாச்சார நிகழ்வுகள் மற்றும் கதிரவனின் 125வது சிறப்பு பட்டிமன்றம் என்பன அரங்கேற்றப்பட்டதுடன், நிகழ்வுகளை அரங்கேற்றிய மாணவர்கள் உள்ளிட்ட கதிரவன் பட்டிமன்ற குழுவினருக்கு மாவட்ட அரசாங்க அதிபர் உள்ளிட்ட அதிதிகளினால் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அர்ச்சுணாவிற்கு பைத்தியம் முற்றிவிட்டது-அருகில்செல்லவேண்டாம் கடித்து விடுவான்!”; ஈரோஸ் பிரபா

August 18, 2026
செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்
செய்திகள்

செம்மணி புதைகுழி அகழ்வுப் பணிகள் நாளை நிறைவு; நீதிமன்றத்தின் மூலம் விசாரணை தொடரும்

August 18, 2026
கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!
செய்திகள்

கைதான வங்கி முகாமையாளர்கள் பற்றி வெளியான அதிர்ச்சித் தகவல்கள்!

August 18, 2026
2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார
செய்திகள்

2029இல் நாமல் ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவோம்; சாந்த பண்டார

August 18, 2026
கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு
அரசியல்

22 ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

August 18, 2026
Next Post
இலங்கைக்கு அருகில் வரவுள்ள காற்று சுழற்சி; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

இலங்கைக்கு அருகில் வரவுள்ள காற்று சுழற்சி; வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு