கடந்தகால போராட்டத்தின்போது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வீட்டுக்கு தீ வைத்ததாக கூறப்படும் சந்தேகநபர் ஒருவரை குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
கொட்டதெனிய பிரதேசத்தை சேர்ந்த 30 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக பேச்சாளர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தனியார் நிறுவனமொன்றில் பணிபுரிபவர் என தல்துவ தெரிவித்தார்.