சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த 8 கடை உரிமையாளர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹிக்கடுவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதான பாடசாலைகளுக்கு அருகில் கடைகளை நடத்தி வந்த 8 பேரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் முன்னெடுத்த விசாரணையின் பிரகாரம் சந்தேகத்திற்குரிய கடை உரிமையாளர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
குறித்த கடைகளில் இருந்த சிகரெட்டுக்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பாடசாலைகளுக்கு அருகாமையில் முன்கெடுக்கப்படும் வகுப்புகளுக்கு வரும் பாடசாலை மாணவர்களுக்கும் குறித்த சந்தேக நபர்கள் சிகரெட்டுக்களை விற்பனை செய்துள்ளமை விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
பாடசாலைகளை அடிப்படையாகக் கொண்டு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் முன்னெடுக்கப்பட்டுள்ள விசேட நடவடிக்கையின் மூலம் இந்த குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கைதுசெய்யப்பட்ட கடை உரிமையாளர்களுக்கு எதிராக காலி நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.