Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தென்கிழக்கு, களனி பல்கலைக் கழகங்களிடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு!

தென்கிழக்கு, களனி பல்கலைக் கழகங்களிடையே அறிவுசார் பரிமாற்ற நிகழ்வு!

2 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

பல்கலைக்கழக அறிவுசார் வளங்களை பரிமாறிக்கொள்ளும் நிகழ்ச்சி திட்டத்தின்கீழ் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு ட்ரோன் கேமர (Drone Camera) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வு நேற்று(14) தென்கிழக்கு பல்கலைக்கழக கலை கலாச்சார பீடத்தின் புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் தலைமையில் இடம்பெற்றது. பீடாதிபதி பேராசிரியர் எம்.எம். பாஸில் அவர்களது வழிகாட்டலில் இடம்பெற்ற குறித்த செயலமைவை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வுக்கு பிரதம அதிதியாக உபவேந்தர் பேராசிரியர் றமீஸ் அபூபக்கர் அவர்கள் கலந்து கொண்டார்.

இந்நிகழ்வின்போது களனி பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீடத்தின் புவியல்துறை தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் லால் மர்வின் தர்மசிறி அவர்களும் பேராசிரியர் ஏ.ஜி. அமரசிங்க அவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட விரிவுரையாளர்களும் கலந்து கொண்டிருந்தனர். அத்துடன் சிரேஷ்ட பேராசிரியர் எம்.ஐ.எம். கலீல் சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எல். பௌசுல் அமீர், கலாநிதி றபீகா அமீர்டீன் , சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.எச். முகம்மட் றினோஸ், விரிவுரையாளர் ஐ.எல். முகம்மட் சாஹிர், விரிவுரையாளர் ஏ.எல். ஐயூப், விரிவுரையாளர் எம்.என். நுஸ்கியா பானு, விரிவுரையாளர் எம். எச். பாத்திமா நுஸ்கியா உள்ளிட்டவர்களும் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.ரீ. அகமட் அஷ்ஹர் அவர்களும் கல்விசாரா உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டிருந்தனர். நிகழ்வின்போது நினைவுச் சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டதுடன் பொன்னாடைகளும் போர்த்தப்பட்டன. ட்ரோன் கேமர (Drone Camera) பயன்பாடு மற்றும் தொழில்நுட்பம் தொடர்பான செயலமர்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக புவியல்துறை திணைக்களத்தின் தலைவர் சிரேஷ்ட விரிவுரையாளர் கே. நிஜாமிர் உள்ளிட்ட விரிவுரையாளர்கள் களனி பல்கலைக்கழக புவியல்துறை மாணவர்களுக்கு விரிவான செயல்முறை பயிற்சிகளையும் விரிவுரைகளையும் ஆற்றினர். களனி பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் விரிவுரையாளர்களின் வருகையை மகிழ்விக்க தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களின் கலாச்சார நிகழ்வுகளும் இடம்பெற்றது.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய
செய்திகள்

கொழும்பில் ஆடி வேல் ஊர்வலத்தில் பங்கேற்ற பிரதமர் ஹரிணி அமரசூரிய

July 29, 2026
உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!
செய்திகள்

உயிரைப் பறித்த குடும்பத் தகராறு; சகோதரியின் மகன் கைது!

July 29, 2026
செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!
செய்திகள்

செம்மணி பகுதியில் 450-க்கும் மேற்பட்ட எலும்புக்கூடுகள் மீட்பு; DNA பரிசோதனைகள் முன்னெடுப்பு!

July 29, 2026
மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது
செய்திகள்

மன்னாரில் 14 ஆயிரம் கடல் அட்டைகள் பறிமுதல்; 9 பேர் கைது

July 29, 2026
250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!
சினிமா

250-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த பிரபல நடிகர் V.C. ஜெயமணி காலமானார்!

July 29, 2026
மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்
காணொளிகள்

மட்டக்களப்பில் “நேர்மையான கலாசாரம்-தூய்மையான இலங்கை” தேசிய செயற்திட்டத்தின் மாவட்ட விழிப்புணர்வு நடைபவனி மற்றும் நாடகம்

July 29, 2026
Next Post
சுமார் 1450 கோடி கட்டண நிலுவை; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தகவல்!

சுமார் 1450 கோடி கட்டண நிலுவை; தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு