Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
குழந்தைகளின் உயிரை காப்பாற்றப்போகும் வயாக்ரா மாத்திரையின் இன்னொரு பக்கம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு!

குழந்தைகளின் உயிரை காப்பாற்றப்போகும் வயாக்ரா மாத்திரையின் இன்னொரு பக்கம்; அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள ஆய்வு!

3 years ago
in செய்திகள், தொழில்நுட்பம்

வயாக்ரா மாத்திரை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றலாம் என கனேடிய மருத்துவர்கள் சிலர் மேற்கொண்ட ஆய்வொன்றிலிருந்து தெரியவந்துள்ளது.

தாம்பத்ய உறவில் பிரச்சினை கொண்டவர்களுக்கான சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும் வயாக்ரா மாத்திரைகளை, உயிருக்கு ஆபத்தான நிலையிலுள்ள பச்சிளங்குழந்தைகளைக் காப்பாற்றவும் பயன்படுத்த முடியும் என வெளியாகியுள்ள ஒரு தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

கனேடிய மருத்துவரான Dr. Pia Winter mark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று மேற்கொண்ட ஆய்வின் முதற்கட்ட முடிவுகளிலிலிருந்து இந்த ஆச்சரிய தகவல் தெரியவந்துள்ளது.

கர்ப்பத்தில் இருக்கும்போது அல்லது பிரசவத்தின்போது குழந்தைக்கு ஆக்சிஜன் தேவையில் பிரச்சினை ஏற்பட்டால், அது குழந்தையின் மூளையில் ஒரு பாதிப்பை ஏற்படுத்தும். அது, neonatal encephalopathy என அழைக்கப்படுகிறது.

தற்போது, இந்த பிரச்சினையால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு physiotherapy, occupational therapy போன்ற உதவியளிக்கும் சிகிச்சைகள் மட்டுமே உள்ளனவே தவிர தெளிவான சிகிச்சை முறைகள் சரியாக இல்லை.

இந்நிலையில், கனடாவின் மொன்றியல் குழந்தைகள் நல மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றும் Dr. Pia Winter mark என்பவர் தலைமையில் மருத்துவர்கள் குழு ஒன்று இந்த neonatal encephalopathyக்கான சிகிச்சை தொடர்பில் ஆய்வுகள் மேற்கொண்டு வந்தது.

ஆய்வின் முதற்கட்ட முடிவுகள் நல்ல செய்தி ஒன்றைக் கொடுத்துள்ளன. ஆம், வயாக்ரா மாத்திரைகள் neonatal encephalopathy பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளுக்கு உதவக்கூடும் என அவர்கள் கண்டுபிடித்துள்ளார்கள்.

பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு 30 நாட்கள் சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில், குழந்தைகளின் மூளையில் ஏற்பட்டிருந்த காயங்கள் பகுதியளவு குணமாகியுள்ளதும், மூளை செல்கள் இழப்பு குறைந்துள்ளதும், மூளையின் deep gray matter என்னும் விடயத்தில் முன்னேற்றம் ஏற்பட்டதும் தெரியவந்துள்ளது.

Dr. Pia Winter mark. இன் இந்த ஆய்வு முழுமையாக வெற்றி பெறுமானால், அது neonatal encephalopathy பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ள குழந்தைகளின் எதிர்காலத்தையே மாற்றக்கூடும் என்று மேலும் தெரிவிக்கப்படுகிறது.

https://www.thechildren.com/news-and-events/latest-news/viagra-could-help-babies-deprived-oxygen-during-childbirth

தொடர்புடையசெய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

September 12, 2026
ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
செய்திகள்

ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

September 12, 2026
கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
செய்திகள்

கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

September 12, 2026
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

September 12, 2026
நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
செய்திகள்

நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

September 12, 2026
விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!
செய்திகள்

விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அமைச்சின் புதிய செயலாளராக ரோஷனி திசாநாயக நியமனம்!

September 12, 2026
Next Post
கட்சியின் பெயரில் திருத்தம் மேற்கொண்டார் நடிகர் விஜய்!

கட்சியின் பெயரில் திருத்தம் மேற்கொண்டார் நடிகர் விஜய்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு