பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் பாராளுமன்ற திருத்தங்கள் மற்றும் மாற்றங்களுக்கு உட்பட்டது. எனவே, அந்தச் சட்டம் குறித்து எவரும் அச்சம் கொள்ள வேண்டாம் என்று நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தின் வரைவிலுள்ள விதிகள் குறித்து சர்வதேச மற்றும் உள்ளூர் சமூகங்கள் எழுப்பியுள்ள கவலைகள் குறித்து அரசாங்கம் அறிந்துள்ளது. விவாதம், சமரசம், நெகிழ்வு தன்மை மூலம் அவற்றை தணிக்க அரசாங்கம் தயாராக உள்ளது என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். அத்துடன், 1979 இல் ஜே. ஆர். ஜெயவர்த்தன ஆட்சியில் பயங்கரவாத தடைச் சட்டம் தற்காலிக ஏற்பாடகவே அறிமுகப்படுத்தப்பட்டது. பின்னர் வந்த அரசாங்கங்கள் அதை அரசியல் ஆதாயங்களுக்காகத் தவறாகப் பயன்படுத்தின. அதனால்தான்,கடுமையான சட்டமாக பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அடையாளப் படுத்தப்பட்டது.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தில்மக்களின் உரிமைகள், சுதந்திரம்,ஜனநாயகத்தை கட்டுப்படுத்தும் விதிகள்
ஏதேனும் இருந்தால் அவற்றை நிவர்த்தி செய்வதில் அரசாங்கம்மகிழ்ச்சியடைகிறது. அது மட்டுமின்றி,
நான் பாராளுமன்றில் சட்டமூலத்தை சமர்ப்பித்தவுடன் எந்தவொரு குடிமகனும் அரசியல் கட்சியும் அல்லது
அமைப்பும் இதனை உச்ச நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்த முடியும் என்றும்
தெரிவித்தார்.
இதேசமயம், பாராளுமன்றத்தில் நாளைமறுதினம் புதன்கிழமை முதல் வாசிப்புக்காக பயங்கரவாத எதிர்ப்பு
சட்டத்தை சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மே மாதம் சமர்ப்பிக்கப்படும் என்றும் கூறினார்.