Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்!

தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டம் மட்டக்களப்பில் ஆரம்பம்!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாடளாவிய ரீதியில் “சக்திமிக்க இளைஞர்களை உருவாக்குவோம்” எனும் தொனிப்பொருளில் இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்கும் திட்டத்தினை விவசாய அமைச்சும், இளைஞர் விவகார விளையாட்டு துறை அமைச்சும் இணைந்து தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடாக முன்னெடுத்துவருகின்றது.

அந்த வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் தெரிவு செய்யப்பட்ட 30 இளைஞர்களுக்கு விவசாய உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் மாவட்ட உதவிப் பணிப்பாளர் என்.குகேந்திரா தலைமையில் மாவட்ட அலுவலகத்தில் நேற்று (20) திகதி இடம் பெற்றது.

பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜஸ்டினா முரளிதரன் கலந்து சிறப்பித்திருந்ததோடு, நிகழ்விற்கு விசேட அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட விவசாய உதவிப் பணிப்பாளர் ஜனாப் சனீர் கலந்து கொண்டிருந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி நிஷாந்தி அருண்மொழி, மா.சசிகுமார், நிஸ்கோ பொது முகாமையாளர் திருமதி சதீஸ்வரி, மாவட்ட தொழில் வழிகாட்டல் உத்தியோகத்தர் ஏ.எம்.ஹனீபா, மட்டக்களப்பு மாவட்டத்தில் 14 பிரதேச செயலாளர் பிரிவுகளில் கடமையாற்றும் இளைஞர் சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் இளம் விவசாய முயற்சியாளர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது மாவட்ட பிரதம அதிதியாக கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த மாவட்ட அரசாங்க அதிபரினால் தெரிவு செய்யப்பட்ட இளம் விவசாயிகளுக்கு விவசாய உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

நாடளாவிய ரீதியில் 10 ஆயிரம் இளைஞர்களை நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய விவசாய துறையில் ஊக்குவிக்கும் வகையிலே இத்திட்டமானது அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் தமது பிரதம அதிதி உரையில் இளம் முயற்சியாளர்களை நாம் எமது மாவட்டத்தில் உருவாக்க வேண்டும் அதன் ஊடாகவே எமது மாவட்டத்தை பொருளாதார ரீதியாகவும் கட்டியொழுப்ப முடியும் என தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!
செய்திகள்

கொழும்பில் கனமழை – பல வீதிகள் நீரில் மூழ்கின; போக்குவரத்து பாதிப்பு!

September 15, 2026
மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!
செய்திகள்

மொட்டு மேடையில் தன்னை ஒரு புலி என சுட்டிக்காட்டிய அர்ச்சுனாவுக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்!

September 15, 2026
யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்
காணொளிகள்

யாழில் இருந்து சென்று மஹிந்த ராஜபக்ஷ கூட்டத்தை புகழ் பாடிய பைத்தியத்தை தெளிய வைக்க வேண்டும்

September 15, 2026
மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!
காணொளிகள்

மட்டக்களப்பில் மீன்பிடி அனுமதிக்கு 7 இலட்சம் ரூபா இலஞ்சம்?; அதிகாரிகள் மீது குற்றச்சாட்டு!

September 15, 2026
முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!
செய்திகள்

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேஷபந்து தென்னகோன் உள்பட மூவர் மனித உரிமை மீறல்; உயர் நீதிமன்றம் தீர்ப்பு!

September 15, 2026
மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!
செய்திகள்

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து; 5 பேர் காயம்!

September 15, 2026
Next Post
இன்று காலை துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

இன்று காலை துப்பாக்கி சூடு; ஒருவர் பலி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு