ஹல்துமுல்ல பிரதேச சபையின் டிரக்டர் வண்டியில் இருந்து டீசல் களவாடப்பட்டதாக தெரிவித்து பிரதேச சபையின் ஊழியர்கள் மூவர் இன்று(21) சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக ஹல்துமுல்ல பொலிஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஹல்தும்முல்ல பிரதேச சபையின் செயலாளர் உபுல் யாபாவினால் முன்வைக்கப்பட்ட முறைபாட்டுக்கு அமைவாக இந்த கைது இடம்பெற்றுள்ளது..
பிரதேச சபைக்கு அருகில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவை சோதித்த பொலிஸார், பின்னர் பிரதேச சபையில் சேவை செய்யும் சுத்திகரிப்பு தொழிலாளர் உள்ளிட்ட மேலும் இரு தொழிலாளர்களை கைது செய்துள்ளனர்.