Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன்; வெளியானது பின்னணி!

விபத்தில் உயிரிழந்த யாழ் பல்கலைக்கழக மாணவன்; வெளியானது பின்னணி!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

வீடொன்றில் தாக்குதல் நடத்தி விட்டு திரும்பி வரும்போதே, யாழ்ப்பாணம் – நீர்வேலி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி யாழ். பல்கலைக்கழக மாணவன் நேற்றுமுன்தினம் (21) உயிரிழந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

நேற்றுமுன்தினம் அதிகாலை 5.30 மணியளவில் அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிறுப்பிட்டி பகுதியில் நாய் குறுக்கே வந்ததால் மோட்டார் சைக்கிளை கட்டுப்படுத்த முடியாமல் விபத்துக்குள்ளாகி பல்கலைக்கழக மாணவன் உயிரிழந்தார்.

யாழ் பல்கலைக்கழகத்தில் 1 ஆம் வருடம் கலைப்பிரிவில் கல்வி கற்றுவரும் மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த மாணவனே இவ்வாறு உயிரிழந்தார்.

மாணவன் உயிரிழந்த விவகாரம் மர்மமாக இருந்த நிலையில், மானிப்பாயை சேர்ந்த மற்றொரு இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, உயிரிழந்த பல்கலைக்கழக மாணவனுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்து விபத்தில் சிக்கியவர் தான் இந்த இளைஞன் என்பது தெரியவந்துள்ளது.

உயிரிழந்த பல்கலைக்கழக மாணவன் மோட்டார் சைக்கிளை செலுத்தியதும், காயமடைந்த மற்றையவர் பின்னாலிருந்து சென்றதும், விபத்தின் போது, அவர்களது மோட்டார் சைக்கிளில் கிரிக்கெட் மட்டை இருந்ததும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

உயிரிழந்த மாணவன் உட்பட சிலர் அதிகாலை 2.58 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு, அதிகாலை 4 மணியளவில்,

வல்வெட்டித்துறை – உடுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தி, வாகனங்களுக்கு தீ வைக்க முயன்று விட்டு திரும்பி வரும் போதே மாணவன் விபத்தில் சிக்கியுள்ளதாக தெரியவந்துள்ளது.

கொழும்பு- யாழ்ப்பாணம் சேவையில் ஈடுபடும் ஒருவரின் வீடு புகுந்து வீட்டு யன்னல் கண்ணாடிகளை அடித்து உடைத்ததுடன், ஹைஏஸ் வாகனத்துக்கு பெற்றோல் ஊற்றி தீவைக்க முயன்றதாகவும்,

அப்போது வீட்டிலிருந்தவர்கள் வெளியே தப்பியோடியதாகவும் தெரியவருகின்றது.

அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் வேகமாக தப்பிச் செல்லும் போதே நீர்வேலி – சிறுப்பிட்டி பகுதியில் பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி படுகாயமடைந்ததாக தெரியவருகின்றது.

அவரது வயிற்றின் கீழ் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டதுடன், பல்சர் மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தாங்கி பகுதி தாக்கியதால் அவருக்கு உயிராபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

அத்துடன், விபத்தில் சிக்கிய மோட்டார் சைக்கிளில் பயணித்த மற்ற இளைஞன் ,

, காயமடைந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றிச் சென்று, பின்னர் நோயாளர் காவு வண்டியில் ஏற்றியனுப்பியதாகவும்

மோட்டார் சைக்கிளை தனது உறவினரின் வீட்டில் விட்டுவிட்டு , சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு சென்றது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

முன்விரோதம் காரணமாக இந்த தாக்குதல் சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என பொலிசாரால் சந்தேகிக்கப்படுகிறது.

நாய் குறுக்கே பாய்ந்ததால் யாழ் பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு!

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
எலான் மஸ்க்கிற்கு போட்டியாக மாறியுள்ள மார்க் சக்கர்பர்க்!

எலான் மஸ்க்கிற்கு போட்டியாக மாறியுள்ள மார்க் சக்கர்பர்க்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.