Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தால் குறைவடையப்போகும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

புதிதாக கொண்டுவரப்படவுள்ள சட்டமூலத்தால் குறைவடையப்போகும் மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளம்!

2 years ago
in செய்திகள்

இலங்கை மத்திய வங்கி உட்பட, அரசுக்கு சொந்தமான நிறுவனங்களின் நிதி அதிகாரங்களை குறைக்கும் சட்டமூலம் நீதி அமைச்சரால் இந்த மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஊழியர்களின் சம்பளத்தை நிர்ணயிக்கும் அதிகாரத்தை நீக்கி, அந்த அதிகாரம் நிதியமைச்சு மற்றும் பாராளுமன்றத்திடம் வழங்கப்படும் என நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.

அதன்படி, மத்திய வங்கியின் ஊழியர்களுக்கு அண்மையில் முன்மொழியப்பட்ட சம்பள உயர்வு இரத்து செய்யப்படும் என்றும், ஆனால் நிதி அமைச்சுடன் கலந்தாலோசித்து நியாயமான சம்பள உயர்வு குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.

முன்மொழியப்பட்ட சட்டமூலத்தின் கீழ், அரசுக்கு சொந்தமான நிறுவனங்களுக்கு நிர்வாக அதிகாரங்கள் மற்றும் நிதிக் கொள்கை முடிவெடுக்கும் அதிகாரங்கள் மட்டுமே வழங்கப்படும்.

அவர்களின் சம்பளத்தை அதிகரிப்பதற்கான அதிகாரங்கள் நிறுவனங்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்றும் அமைச்சர் கூறினார்.

இம்மாதம் முன்வைக்கப்படவுள்ள சட்டமூலத்தின் அடிப்படையில், அரச நிறுவனங்கள் பாராளுமன்ற நிதி அதிகாரங்களை மீறுவதற்கு அனுமதிக்கப்பட மாட்டாது என்று அவர் கூறினார்.

தற்போதுள்ள பிரச்சினைகளில் ஒன்று அரச நிறுவனங்களின் நிதி அதிகாரங்கள் குறித்து சரியான விளக்கம் இல்லை என்றும், அதன் மூலம் அவர்களில் பலர் பாராளுமன்ற அதிகாரங்களை புறக்கணிக்க முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

உத்தேச சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்றத்தில் உள்ள கட்சித் தலைவர்களுக்கு செவ்வாய்கிழமை விளக்கமளிக்கப்படவுள்ளதுடன், ஏனைய அமைச்சர்களும் பாராளுமன்ற நிதி அதிகாரங்களை பேணுவது தொடர்பான யோசனைகளை சமர்ப்பிக்கவுள்ளனர்.

வெளிநாடுகளில் உள்ள ஏற்றுமதியாளர்கள் நிதியைத் தக்கவைத்துக்கொள்வது, சட்டவிரோத நுண்நிதி நிறுவனங்களின் வியாபாரங்களை நிறுத்துவதற்கான நடவடிக்கைகள், குத்தகை விவகாரங்கள் மற்றும் அடகு வைத்தல் தொடர்பான பிரச்சினைகள் நிலுவையில் இருக்கும் போதே மத்திய வங்கி ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ராஜபக்ஷ தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!
செய்திகள்

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026
தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
செய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

August 17, 2026
Next Post
மட்டு கல்லடியில் அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

மட்டு கல்லடியில் அழகுக்கலை நிபுணர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு