தங்க முலாம் பூசப்பட்ட வெள்ளி வாளை எடுத்துச் சென்ற தென் மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பைச் சேர்ந்த ஒருவர், திஸ்ஸமஹாராமவைச் சேர்ந்த ஒருவரிடம் தங்க முலாம் பூசப்பட்ட வாளைக் கொடுக்குமாறு கூறி தன்னிடம் வழங்கியதாகவும், இருவரும் ஒருவரையொருவர் அடையாளம் காணவில்லை எனவும் சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார் .
சந்தேக நபர் திக்வெல்ல பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக அவர் லுணுகம்வெஹர பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார் .