லங்கா இந்தியன் ஒயில் (LIOC) மற்றும் சினோபெக் (Sinopec) ஆகிய நிறுவனங்கள் ஒக்டேன் 95 பெற்றோலின் விலையை லீற்றர் ஒன்றுக்கு 20 ரூபாவினால் அதிகரித்துள்ளன.
இதற்கமைய, இதுவரை 495 ரூபாவாகக் காணப்பட்ட ஒக்டேன் 95 பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை, இன்று (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் 515 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
இந்த விலை உயர்வைத் தொடர்ந்து, குறித்த நிறுவனங்களின் எரிபொருள் விற்பனை நிலையங்களில் ஒக்டேன் 95 பெற்றோல் புதிய விலைக்கு விற்பனை செய்யப்படும்.








