Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

எம்.ஜி.ஆர் உடன் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் நடித்த தாய்லாந்து நடிகை துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை!

1 hour ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

1973ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடிப்பில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற ‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் நடித்த தாய்லாந்து நாட்டைச் சேர்ந்த பழம்பெரும் நடிகை மேட்டா ரூங்ராத் (Metta Roongrat) துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

83 வயதான நடிகை மேட்டா ரூங்ராத், தாய்லாந்தின் மின்புரி நகரில் உள்ள தனது வீட்டின் படுக்கையறையில் கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 3) துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

‘உலகம் சுற்றும் வாலிபன்’ திரைப்படத்தில் எம்.ஜி.ஆர் உடன் மஞ்சுளா, லதா, சந்திரகலா உள்ளிட்டோருடன் இணைந்து நடித்திருந்த இவர், குறிப்பாகப் படத்தில் இடம்பெற்ற ‘பச்சைக்கிளி முத்துச்சரம்’ பாடலில் எம்.ஜி.ஆருடன் இணைந்து நடனமாடியதன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பிரபலமானார்.

நடிகை அல்சைமர் எனப்படும் மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகத் தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவர் உயிரிழந்த அறைக்குள் வெளிநபர்கள் எவரும் பிரவேசித்ததற்கான அறிகுறிகள் கண்டறியப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தகவலறிந்த அதிகாரிகள் அவரது உடலை மீட்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

தாய்லாந்தின் முன்னணி நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்த மேட்டா ரூங்ராத்தின் மரணம் தமிழ் இரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்
செய்திகள்

பொதுமக்களைத் தகாத வார்த்தைகளால் திட்டும் பொலிஸாருக்கு இனி ஆப்பு!; ஒழுக்காற்று நடவடிக்கைக்கு பொலிஸ் மா அதிபர் தயார்

November 5, 2026
ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூ.20 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ.515!
செய்திகள்

ஒக்டேன் 95 பெற்றோல் விலை ரூ.20 ஆல் அதிகரிப்பு; புதிய விலை ரூ.515!

November 5, 2026
1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!
செய்திகள்

1,000cc-க்கும் அதிகமான அதிசக்தி மோட்டார் சைக்கிள்களுக்கு அனுமதி வழங்க அரசாங்கம் பரிசீலனை!

November 4, 2026
ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!
செய்திகள்

ஒரே மாதத்தில் ரூ.423 கோடியால் அதிகரித்த கடனட்டை நிலுவைக் கடன்!

November 4, 2026
காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!
செய்திகள்

காலிப் போத்தல்களின் உற்பத்திச் செலவு அதிகரிப்பை காரணம் காட்டி மதுபானங்களின் விலைகள் உயர்ந்தன!

November 4, 2026
ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!
செய்திகள்

ஏவுகணை சோதனைகளால் உலகை மிரள வைக்கும் வட கொரியா!

November 4, 2026

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு