Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கு போசணைக் குறைபாடு!

பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகளுக்கு போசணைக் குறைபாடு!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையில் 5 முதல் 19 வயது வரையிலான 410,000 பாடசாலையில் கல்வி கற்கும் பெண் பிள்ளைகள் போசணைக் குறைபாடு காரணமாக எடை குறைவாக இருப்பதாக வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.

இது குறித்து வைத்தியர்களின் மருத்துவ மற்றும் குடியுரிமைகள் நிபுணத்துவ சங்கத்தின் தலைவர் வைத்தியர் சமல் சஞ்சீவ வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளதாவது,

பிரித்தானிய ‘லான்செட் மெடிக்கல் ஜர்னல்’ இதழின் ஆய்வின் படி உலகில் போசணை குறைபாடு காரணமாக உடல் எடை குறைந்தவர்கள் அதிகம் இருக்கும் நாடுகளின் பட்டியலில் இலங்கையும் உள்ளது.

உலகளவில் உடல் எடை குறைவினால் பாதிக்கப்பட்டவர்களில் பெண்களின் வீதம் இந்தியாவுக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ளது.

199 நாடுகளில் 22 கோடி பேரிடம் சுமார் 1,900 ஆராய்ச்சியாளர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் உடற் திணிவுச் சுட்டி (உயரத்திற்கான எடை) முக்கிய அளவுகோலாக எடுக்கப்பட்டுள்ளது.

ஒருவரது உடலினது உயரத்திற்கு பொருத்தமான நிறை எவ்வளவு என்பதை கணித்தல் உடற் திணிவுச் சுட்டி ஆகும்.

1990-2022 வரை சேகரிக்கப்பட்ட தரவுகளைப் பயன்படுத்தி முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், போசணைக் குறைப்பாட்டால் பாடசலை பிள்ளைகளின் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படுவது மட்டுமன்றி, மனவளர்ச்சி குன்றும் ஆபத்தில் உள்ளனர். எனவே இதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால் நாட்டில் மனவளர்ச்சி குன்றிய பிள்ளைகளின் தலைமுறை உருவாகும்.

போசணை குறைபாடு காரணமாக பிள்ளைகளிடையே என்சைம்கள் மற்றும் ஹோர்மோன்களின் உற்பத்தி பலவீனமடைந்து நாளாந்த உடல் செயல்பாடுகளில் தொய்வு நிலை ஏற்பட வழிவகுக்கிறது. அத்தோடு சிறுவர்கள் நோயெதிர்ப்பு சக்தி குறைபாடு காரணமாக பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவார்கள்.

போசணைக் குறைப்பாடு நெருக்கடி மனவளர்ச்சி குன்றுவதற்கு முக்கிய காரணமாக உள்ளது. இது நாட்டில் தேசிய அபிவிருத்திக்கு பங்களிக்கக்கூடிய கல்வி கற்ற மற்றும் புத்திசாலி இளைஞர்களின் எண்ணிக்கை குறைவதற்கு வழிவகுக்கும்.

நாட்டில் 17.8 சதவீத ஆண் பிள்ளைகள் தங்கள் வயதுக்குக் குறைவான எடையுடன் உள்ளனர். அதாவது 450,000 ஆண் பிள்ளைகள் உள்ளனர்.

அதன்படி, நாட்டில் மொத்தமான 860,000 பாடசாலை மாணவர்கள் எடை குறைவாக இருப்பதாக புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன.

தொடர்புடையசெய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன
செய்திகள்

எங்கள் அரசாங்கம் இல்லாமலிருந்திருந்தால் எரிபொருள் விலை 700 ரூபாவை எட்டிருக்கும்; நாமல் கருணாரத்ன

October 3, 2026
தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு
செய்திகள்

தடுப்பூசி செலுத்துதல் தொடர்பில் GMOA வெளியிட்ட கருத்திற்கு கால்நடை வைத்தியர்கள் எதிர்ப்பு

October 3, 2026
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா
செய்திகள்

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30வது பொதுப்பட்டமளிப்பு விழா

October 3, 2026
இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்
செய்திகள்

இலங்கைக்கு கடத்த முயன்ற கடலட்டைகள் பறிமுதல்

October 3, 2026
உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!
செய்திகள்

உஸ்பெகிஸ்தான் பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய குற்றம்; முச்சக்கரவண்டி ஓட்டுநருக்கு 10 ஆண்டுகள் சிறை!

October 3, 2026
நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளுக்கு பலத்த மின்னல் எச்சரிக்கை!

October 3, 2026
Next Post
22 இந்திய மீனவர்கள் கைது!

22 இந்திய மீனவர்கள் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.