உலகம் முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள GTA 6 (Grand Theft Auto 6) விளையாட்டு நாளை (19) வெளியாகவுள்ள நிலையில், அன்றைய தினம் பாடசாலைக்கு வருகை தரும் மாணவர்களுக்கு 65 பவுண்ட் பெறுமதியான Amazon பரிசு வவுச்சரை வெல்லும் வாய்ப்பை இங்கிலாந்தின் பாடசாலையொன்று அறிவித்துள்ளது.
இங்கிலாந்தின் பிஷப் ஆக்லண்ட் பகுதியில் அமைந்துள்ள St John’s Catholic School & Sixth Form College என்ற பாடசாலையே இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
GTA 6 விளையாடுவதற்காகப் பாடசாலைக்கு வராமல் இருப்பது அல்லது இரவு முழுவதும் விளையாடிவிட்டு சோர்வு காரணமாக வகுப்புகளுக்கு வரத் தவறுவது ஆகிய இரண்டும் தோல்வியாகக் கருதப்படும் எனப் பாடசாலை எச்சரித்துள்ளது.
அன்றைய தினம் முழுவதும் பாடசாலைக்கு வருகை தந்து வகுப்புகளை நிறைவு செய்யும் ஒவ்வொரு மாணவரும் 65 பவுண்ட் பெறுமதியான Amazon பரிசு வவுச்சரை வெல்வதற்கான குலுக்கலில் இணைத்துக்கொள்ளப்படுவர்.
GTA 6 விளையாட்டின் விலைக்கு இணையான பெறுமதியைக் கொண்ட இந்தப் பரிசை வெல்வதற்கு, மாணவர்கள் ஒருநாள் பாடசாலை வருகையை உறுதிப்படுத்தினால் போதுமானது எனப் பாடசாலை அறிவித்துள்ளது.









