அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உள்ளிட்ட அமெரிக்க அரசியல் தலைவர்களைக் கொலை செய்யத் திட்டமிட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்ட பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த 48 வயதுடைய ஆசிஃப் மெர்ச்சன்ட்டுக்கு 27 ஆண்டுகளுக்கும் மேலான சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் (IRGC) சார்பில் இந்தத் திட்டத்தை முன்னெடுத்ததாகக் கூறப்படும் அவர், கூலிப்படையைக் கொண்டு கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில் கடந்த மார்ச் மாதம் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார்.
நவம்பர் 17ஆம் திகதி நியூயோர்க் நீதிமன்றம் அவருக்கு 330 மாதங்கள் சிறைத்தண்டனை விதித்ததாக அமெரிக்க நீதித்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் முன்னாள் அமெரிக்கத் தூதர் நிக்கி ஹேலி ஆகியோரும் சாத்தியமான இலக்குகளாகக் கருதப்பட்டதாகவும், 2020ஆம் ஆண்டு அமெரிக்கத் தாக்குதலில் கொல்லப்பட்ட ஈரான் இராணுவத் தளபதி காசெம் சுலைமானியின் படுகொலைக்குப் பழிவாங்கும் நோக்கில் இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.







