ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் மொத்த விலை 300 ரூபாவிலிருந்து 265 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் இறக்குமதியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
190 ரூபாவாக இருந்த மாவு 175 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாவில் இருந்து 285 ரூபாவாக குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.