Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஐக்கிய தேசிய கட்சியின் மட்டக்களப்பு மாவட்டத்தின் மூன்று தொகுதிகளுக்கான 43 வட்டார அமைப்பாளர்களுக்கான நியமனம் வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று (21) திகதி மட்டக்களப்பில் இடம் பெற்றது.

மட்டக்களப்பு பொதுநூலக கேட்போர் கூடத்தில் கட்சியின் கல்குடா ,பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர்களான எஸ்.சுதர்சனன்,கலாநிதி முசாமில் ஆகியோர்களின் தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் ஐக்கிய தேசிய கட்சியின் பொது செயலாளர் பாலித்த ரங்கே பண்டார கலந்து கொண்டு அமைப்பாளர்களுக்கான நியமனங்களை வழங்கி வைத்துள்ளதுடன், கட்சியின் செயற்பாட்டாளர்களுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.

ஐக்கிய தேசிய கட்சியின் ‘சிறிகொத’ வடக்கு மற்றும் கிழக்கிற்கு பொறுப்பாளராக உள்ள திருமதி.துஷாரி பெரேரா உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள், மாவட்ட, பிரதேச செயற்பாட்டாளர்கள், முன்னாள் பிரதேசசபை உறுப்பினர்கள், முன்னைய தேர்தல்களின் வேட்பாளர்களாக களமிறங்கியவர்கள் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.

இங்கு கட்சியின் செயலாளர் கருத்து தெரிவிக்கையில்,

எமது ஜனாதிபதி அவர்கள் சொல்லியிருந்தார் எமது கட்சியை வளர்த்து செல்லக் கூடிய உறுப்பினர்களை சேர்த்து எமது கட்சியை வளப்படுத்துங்கள் என்று அதற்கு அமைவாகவே நாம் கட்சியை வளர்த்து எடுப்பதற்காக இவ்வாறான முன்னெடுப்புக்களை மேற்கொண்டு வருகின்றோம்.

மூன்று தொகுதிகளுக்கு முதலில் 3 போரை நியமித்தோம். தற்போது 43 பேரை நியமித்துள்ளோம்.

உங்களது பகுதிகளில் உள்ள பிரச்சனைகளை எமக்கு அறிவித்து எம்மூடாக உரிய அமைச்சிற்கு அறிவித்து அவற்றை நிவர்த்தி செய்ய நாங்கள் முன்னின்று உழைப்போம்.

இன்று கட்சியினால் நியமிக்கப்படுபவர்கள் ஊரில் சென்ற சண்டி தனம் காட்ட கூடாது, மண் கொள்ளையில் ஈடுபட கூடாது மக்களுக்காக செயற்பட வேண்டும்.

நீங்கள் தற்போதிலிருந்து நிருவாகிகளாக மாறுகின்றீர்கள்.

முதலாவதாக ஜனாதிபதி தேர்தலே இடம் பெறவுள்ளது. ஒரு சிலர் ஊடகங்களுக்கு முன் வந்து சொல்கின்றனர் பாராளுமன்ற தேர்தல் இடம் பெற வேண்டும் என்று ஆனால் முதலில் ஜனாதிபதித் தேர்தலே இடம் பெற வாய்ப்பு உள்ளது.

அது மட்டுமல்லாது ஜனாதிபதி சொல்லியிருக்கின்றார் முதலில் ஜனாதிபதி தேர்தலே இடம்பெறும் என்று.

நோன்பு முடிய மட்டக்களப்பில் ஜனாதிபதி தலைமையில் பாரிய கூட்டம் ஒன்று இடம்பெறவுள்ளது.

விவசாயிகளை ஊக்குவிக்க பல திட்டங்களை நாம் முன்னெடுத்து வருகின்றோம்.

யாரு வந்தாலும் மக்களின் குறைகளை தீர்க்க கூடிய ஜனாதிபதி எமது கட்சியிலே இருக்கின்றார்.

அடுத்த வருடம் பாராளுமன்ற தேர்தல் இடம் பெறவுள்ளது அதற்கும் இன்று நியமிக்கப்படும் நீங்கள் கட்சிக்காக வேலை செய்வதற்கு முன்னிக்க வேண்டும்-என்றார்.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!
செய்திகள்

சிறைச்சாலைச் சம்பவங்கள் குறித்து நீதி அமைச்சரின் விசேட உரை!

August 7, 2026
நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!
செய்திகள்

நாடளாவிய ரீதியில் குற்றச்செயல்களில் ஈடுபட்ட 508 பேர் கைது!

August 7, 2026
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!
செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதில் மாற்றம்; வௌியானது வர்த்தமானி!

August 7, 2026
நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

நாட்டில் தொடரும் சிறைக்கலவரங்கள்; முப்படையினருக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு!

August 7, 2026
Next Post
கடுமையாக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர் விசா விதிமுறைகள்!

கடுமையாக்கப்பட்ட அவுஸ்திரேலிய மாணவர் விசா விதிமுறைகள்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.