Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண் பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு?; சட்டத்திருத்தம் தொடர்பில் புதிய முன்மொழிவுகள்!

பெண் பிள்ளைகள் பாலியல் உறவில் ஈடுபடும் வயது குறைப்பு?; சட்டத்திருத்தம் தொடர்பில் புதிய முன்மொழிவுகள்!

3 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜே.வி.பி நாட்டில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை” என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை குறைப்பது தொடர்பாக எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

குற்றவியல் சட்டத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களின் ஊடாக பாலியல் செயற்பாட்டில் ஈடுபடக்கூடிய பெண் பிள்ளைகளின் வயதை 14 வருடங்களாக குறைக்க மற்றும் ஆண் குற்றவாளிகளின் வயது 22க்கு குறைவாக இருந்தால் தண்டனையை தளர்த்த வேண்டும் என்றும் முன்மொழியப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று சபையில் தெரிவித்திருந்தார்.

இது குறித்து அவர் தெரிவித்ததாவது” 2024 பெப்ரவரி 13 ஆம் திகதி வெளியிடப்பட்ட தண்டனைச் சட்டத்தின் 363 மற்றும் 364 ஆவது சரத்தின் 19 ஆம் அத்தியாயத்தின் திருத்தம் தொடர்பான சட்டமூலத்தை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.

இந்த மசோதாவின் மூலம், பாலியல் செயற்பாட்டிற்காக வயது குறைந்த சிறுமிகளின் வயதை 16 இலிருந்து 14 ஆகக் குறைப்பது, 22 வயதுக்குட்பட்ட ஆண் குற்றவாளிகளுக்கான தண்டனையைக் குறைப்பது, அது போல தண்டனைச் சட்டத்தின் பிரிவு 363 ஆண் மற்றும் பெண் பலாத்காரத்தை ஒன்றாக வைப்பதற்குப் பதிலாக , பெண் பலாத்காரத்திற்கான தனிச்சட்டங்களும் மற்றும் ஆண்களுக்கு தனித்தனி சட்டங்கள், தனித் திருத்தங்கள் மூலம் ஆண்களுக்கு இருக்க வேண்டிய சட்டங்களையும் முன்வைக்க மிகவும் முக்கியமான விடயங்களாக ஆளும் கட்சியின் பிரதம அமைப்பாளரின் கவனத்திற்கு நான் கொண்டு வருகிறேன்.

மேலும், குற்றவியல் சட்டத்தின் 363 மற்றும் 364 பிரிவுகளை திரும்பப் பெறுமாறு அரசை கேட்டுக் கொள்கிறேன். குழந்தைகள், பெண்கள் மற்றும் ஆண்களின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் இவ்வாறு சஜித் பிரேமதாச தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து கருத்துத் தெரிவித்த நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவின் விளக்கத்தை நீதி அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்வேன். இது எதிர்க்கட்சிகளின் கருத்தா என்று எனக்குத் தெரியவில்லை. ஜே.வி.பி விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க முயற்சிப்பதால், அதற்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்று தெரியவில்லை. இது ஒரு சிக்கலான பிரச்சினை. இது கலந்துரையாட வேண்டிய விடயம் தான்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு
செய்திகள்

மட்டு காத்தான்குடி கடலில் ரூ.50 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு

October 2, 2026
அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!
செய்திகள்

அடுத்த ஆண்டு முதல் நாட்டின் வரி முறையை எளிமையாக்க திட்டம்!

October 2, 2026
2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!
செய்திகள்

2027 ஏப்ரல் முதல் நச்சுப் பழங்களை விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை!

October 2, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழை பெய்யும் வாய்ப்பு!

October 2, 2026
கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!
செய்திகள்

கீரி சம்பா அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தக நிறுவனத்திற்கு ரூ.5 இலட்சம் அபராதம்!

October 1, 2026
டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை
செய்திகள்

டிஜிட்டல் யுகத்தில் புதிய வடிவம் பெறும் சிறுவர் துஷ்பிரயோகங்கள்; தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை

October 1, 2026
Next Post
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தின விழா!

கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சர்வதேச மொழிபெயர்ப்பு தின விழா!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு