ஹொரொவ்பொத்தானை, இஹல கும்புக்கொல்லேவ பகுதியில் உள்ள பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து மீட்கப்பட்ட நபரின் மரணம் கொலை என்பது பொலிஸாரின் விசாரணைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் 17 வயதுடைய யுவதி ஒருவரும், 23 மற்றும் 26 வயதுடைய இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மூவரும் இஹல கும்புக்கொல்லேவ பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி குறித்த பகுதியில் அமைந்துள்ள பாழடைந்த விவசாயக் கிணற்றிலிருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் முன்னெடுத்த தீவிர விசாரணைகளின் அடிப்படையில், குறித்த மரணம் இயற்கையானதல்ல, அது திட்டமிட்ட கொலை என்பது தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடம் மேலதிக விசாரணைகளை ஹொரொவ்பொத்தானை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








