Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி மறுப்பு!

பாராளுமன்றத்தை கலைக்கும் தீர்மானத்திற்கு எதிர்க்கட்சி மறுப்பு!

2 years ago
in அரசியல், செய்திகள், முக்கிய செய்திகள்

பாராளுமன்றத்தை கலைத்து உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான யோசனையை முன்வைத்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரியுள்ள நிலையில், அந்த தீர்மானத்தில் ஒருபோதும் கைச்சாத்திடவோ ஆதரவு வழங்கவோ போவதில்லை என்று அக்கட்சிகள் பதலளித்துள்ளன. இதேவேளை, மே மாதம் இடம்பெறவுள்ள வெசாக் பண்டிகையை தொடர்ந்து ஜனாதிபதி தேர்தலுக்கான உத்தியோகபூர்வ அறிவிப்பை வெளியிட அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் திங்கட்கிழமை இடம்பெற்ற தேர்தல் செயலாற்றுகை குழு கூட்டத்திலேயே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தி ஆளும் பொதுஜன பெரமுனவுக்குள் கருத்து முரண்பாடுகள் வலுப்பெற்று பிளவுகள் ஏற்பட்டன.

கடந்த புதன்கிழமை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து கலந்துரையாடிய பசில் ராஜபக்ஷ, பொதுத்தேர்தலை முதலில் எதிர்கொள்வதன் ஊடாக கட்சியை பாதுகாத்துக்கொள்ளலாம் என்ற கருத்தை முன்வைத்து கலந்துரையாடியுள்ளார்.

இதேவேளை, பொதுஜன பெரமுனவிலிருந்து விலகி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்துள்ள தரப்பு, சுயாதீன குழு மற்றும் ஜனாதிபதி ரணிலுடன் நெருக்கமாகியுள்ள பொதுஜன பெரமுனவினர் என அனைத்து தரப்புகளையும் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்தும் இந்த சந்திப்பின்போது தகவல் கூறியுள்ளார்.

எனினும், அரசியலமைப்பின் பிரகாரம், அடுத்து ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ளமையால் ஜனாதிபதி ரணிலின் தீர்மானத்துக்கு அமைய செயற்படுவதே சிறந்தது என இதன்போது வலியுறுத்தப்பட்டுள்ளது.

மறுபுறம் பாராளுமன்றத்தை கலைத்து உடனடி பொதுத் தேர்தலுக்கு செல்வதற்கான தீர்மானத்தை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன முன்வைக்கவுள்ளதாகவும், அதற்கு ஆதரவளிக்குமாறு கோரிக்கை விடுத்து, ஐக்கிய மக்கள் சக்தி, தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணிக்கு அறிவிப்புகள் விடுக்கப்பட்டன.

இதற்கு மறுப்பு தெரிவித்துள்ள ஐக்கிய மக்கள் சக்தி, பொதுஜன பெரமுன பாராளுமன்றத்தில் கொண்டுவரும் எந்தவொரு தீர்மானத்திற்கும் ஆதரவளிக்கப் போதில்லை என்பதுடன், உங்களது நேர்மையை வெளிப்படுத்த விரும்பினால், முதலில் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை வெற்றிபெறச் செய்ய வைக்குமாறு மறுமொழி அளிக்கப்பட்டுள்ளது.

மக்கள் விடுதலை முன்னணியும் முதலில் பாராளுமன்ற தேர்தலுக்கு செல்வதில் பெரிதாக ஆர்வம் காட்டாமையினால் இந்த அழைப்பை கருத்தில் கொள்ளவில்லை. இவ்வாறானதொரு நிலையிலேயே ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் நியமிக்கப்பட்ட தேர்தல் செயலாற்றுகை குழுவில் தேர்தலுக்கான அறிவிப்பு குறித்து பேசப்பட்டது.

அரசியலமைப்பின் பிரகாரம் ஒக்டோபர் மாதத்தில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற வேண்டும். யார் ஜனாதிபதியானாலும் ஓரிரு மாத்துக்குள் பாராளுமன்றத்தை கலைத்து பொதுத்தேர்தலுக்கு செல்ல முடியும் என்று இங்கு கூறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
சோதனை ஓட்டம் நடத்துவதாக கூறி காரை கடத்தி சென்றவர் கைது!

சோதனை ஓட்டம் நடத்துவதாக கூறி காரை கடத்தி சென்றவர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.