Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

எரிபொருள் விலை உயர்வு மற்றும் அஸ்வெசும நிவாரணத்திற்காக ரூ.47 பில்லியன் ஒதுக்கீடு!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

எரிபொருள் விலை அதிகரிப்பினால் பொதுமக்களுக்கு ஏற்படும் பொருளாதாரச் சுமையைக் குறைப்பதுடன், அஸ்வெசும நலன்புரித் திட்டப் பயனாளிகளுக்கு மேலதிக நிதி நிவாரணம் வழங்குவதற்காக 47 பில்லியன் ரூபா மேலதிக நிதி ஒதுக்கீட்டை இன்று (04) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் உரையாற்றிய அவர், இந்த நிதி ஒதுக்கீட்டில் 41 பில்லியன் ரூபா வலுசக்தி அமைச்சின் செலவினங்களுக்காகவும், எஞ்சிய 6 பில்லியன் ரூபா அஸ்வெசும நலன்புரித் திட்டத்திற்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களினால் உள்நாட்டு நுகர்வோருக்கு ஏற்படும் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் நோக்கில், ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய மூன்று மாதங்களுக்கும் 41 பில்லியன் ரூபா பயன்படுத்தப்படவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அஸ்வெசும திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு மேலதிக நிதி உதவி வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மிக வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு 6,250 ரூபாவும், வறுமை நிலையில் உள்ள குடும்பங்களுக்கு 4,000 ரூபாவும் மேலதிகக் கொடுப்பனவாக வழங்கப்படவுள்ளதாகப் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

மிக வறுமைப் பிரிவினருக்கான 6,250 ரூபா கொடுப்பனவு இரண்டு தவணைகளாக வழங்கப்படும் என்பதுடன், இந்த மேலதிக நிதியுதவி ஒருமுறை மாத்திரமே வழங்கப்படும் எனவும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

மேலும், இந்த மேலதிக நிதி ஒதுக்கீட்டிற்காக அரசாங்கத்திற்கு புதிதாக மேலதிகச் செலவினம் ஏற்படாது எனவும், ஏற்கனவே ஒதுக்கப்பட்டுள்ள நிதியை ஏனைய துறைகளிலிருந்து மறுசீரமைப்பதன் மூலம் தேவையான நிதி பெற்றுக்கொள்ளப்படும் எனவும் பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!
செய்திகள்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நீதிமன்றுக்கு!

November 4, 2026
இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!
செய்திகள்

இந்தியாவில் நடைபெற்ற BIMSTEC கடற்படைப் பயிற்சியில் பங்கேற்ற இலங்கை கடற்படை அதிகாரி உயிரிழப்பு!

November 4, 2026
கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!
செய்திகள்

கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!

November 4, 2026
மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!
செய்திகள்

மருத்துவ அறிக்கையில் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என உறுதி; வவுனியா பொலிஸாரின் நடவடிக்கை குறித்து விசாரணைக்கு நீதவான் உத்தரவு!

November 4, 2026
TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ
செய்திகள்

TIN இலக்கத்திற்கு பதில் தேசிய அடையாள அட்டையை பயன்படுத்த அனுமதி; நளிந்த ஜயதிஸ்ஸ

November 4, 2026
மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!
செய்திகள்

மலையக ரயில் பாதையில் மண்சரிவு; பொடி மெனிகே உள்ளிட்ட ரயில் சேவைகள் பாதிப்பு!

November 4, 2026
Next Post
கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!

கல்முனையில் 6 கிலோகிராமுக்கும் அதிகமான போதைப்பொருள் மீட்பு; 61 வயதுடைய நபர் கைது!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு