Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மைத்திரி குற்றப் புலனாய்வுக்கு வழங்கிய வாக்கு மூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

மைத்திரி குற்றப் புலனாய்வுக்கு வழங்கிய வாக்கு மூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும்; ஜனா எம்.பி தெரிவிப்பு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வழங்கிய வாக்குமூலங்கள் மக்களுக்கு வெளிப்படுத்தப்படவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகமுமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்தார்.

இன்று (26) அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்காலத்தில் நடைபெறும் தேர்தல்களை தள்ளிப்போடுவதற்காக, தேர்தல் முறைமை மாற்றம் தொடர்பான சட்டமூலம் அரசாங்கத்தால் கொண்டுவரப்படுகின்றதா என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் உள்ளது.

எது எப்படிஇருந்தாலும் ஜனாதிபதி தேர்தல் நடாத்தியே ஆகவேண்டும்.அந்த தேர்தலை இந்த நாட்டு மக்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்..

ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் தீர்மானமானது தமிழ் மக்களுக்கான தீர்வினை நோக்கியதாக இருக்கவேண்டும் என்பதற்காக அனைவரும் ஒன்றிணைந்து சரியான தீர்மானத்தை எடுக்கவேண்டும்.

தேசிய மக்கள் மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க,தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வினை முன்வைக்கவேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

ஜேவிபியை பொறுத்த வரையில் தமிழர்கள் நன்கு உணர்ந்துள்ளனர்.தமிழர்களின் பிரச்சினைக்கு ஆரம்ப புள்ளியாக வந்த மாகாணசபை முறைமையினை மூர்க்கத்தனமாக எதிர்த்தவர்கள் ஜேவிபியினர்.அதற்கு எதிராக எதிர்த்தவர்கள் மட்டுமன்றி தற்காலிகமாக இணைக்கப்பட்டிருந்த வடகிழக்கினை பிரித்து தனியலகாக மாற்றியவர்கள் இவர்கள் என்பதை நாங்கள் மறக்கவில்லை.

ஜேவிபியினர் தமிழர்களின் வாக்குகளை பெறவேண்டுமானால் அல்லது தமிழர் பகுதிகளில் பிரச்சாரங்களை முன்னெடுக்கவேண்டுமானால் தமிழர்களின் இனப்பிரச்சினைக்கு என்ன தீர்வினை முன்வைக்கின்றார்கள் என்பதை பொறுத்தே நாங்கள் அவர்களுடன் எந்தவிதமான உறவுகளையும் முன்னெடுக்கமுடியும் என அவர் தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி
செய்திகள்

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி

October 2, 2026
மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
காணொளிகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!

October 2, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
Next Post
வட மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்ட 52 பேர்!

வட மாகாணத்தில் படுகொலை செய்யப்பட்ட 52 பேர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு