Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராஜீவ் காந்தி கொலை விவகாரம்; ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர்!

ராஜீவ் காந்தி கொலை விவகாரம்; ஒரு வாரத்திற்குள் இலங்கைக்கு அனுப்பப்படவுள்ள மூவர்!

2 years ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகியோருக்கு இலங்கை துணை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கியுள்ளதாகவும் ஒரு வாரத்திற்குள் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவார்கள் எனவும் தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் விடுவிக்கப்பட்டு திருச்சி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள முருகன் தனக்கு அடையாள அட்டை வழங்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் முருகன் தாக்கல் செய்துள்ள மனுவில், “இலண்டனில் உள்ள எனது மகளுடன் சென்று வசிப்பதற்கு விசா எடுக்க விண்ணப்பிக்க போகிறேன். அதற்கு விண்ணப்பிக்க வேண்டும் எனில், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை கட்டாயம் ஆகும். எனவே தனக்கு உரிய அடையாள அட்டையை வழங்கும்படி கடந்த ஜனவரி மாதம் மறுவாழ்வு இயக்குநரிடம் விண்ணப்பித்தேன். ஆனால், அந்த விண்ணப்பத்தின் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே அடையாள அட்டை வழங்க மறுவாழ்வு இயக்குநருக்கு உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கை விசாரிப்பதில் இருந்து விலகுவதாக நீதிபதி சுந்தர் மோகன் தெரிவித்தார். இதையடுத்து, முருகனின் வழக்கை வேறு அமர்வில் பட்டியலிடும் வகையில் தலைமை நீதிபதியின் ஒப்புதலை பெற பதிவுத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த மனு மீதான விசாரணை செவ்வாய்க்கிழமை நீதிபதிகள் ஆர்.சுரேஷ் குமார், குமரேஷ் பாபு ஆகியோர் முன்னிலையில் நடந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் ஆர். முனியப்பராஜ் ஆஜராகி, “முருகன், ஜெயக்குமார், ரொபட் பயஸ் ஆகிய மூவருக்கும் இலங்கை துணை தூதரகம் தரப்பில் கடவுச்சீட்டு வழங்க விட்டது.

மூவரையும் இலங்கைக்கு அனுப்ப அனுமதி கோரி இந்திய மத்திய அரசுக்கு நேற்று முன்தினம் கடிதம் எழுதப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் ஒருவாரத்தில் மூவரும் இலங்கைக்கு அனுப்பப்படுவர்.” என்று கூறினார். இன்னும் ஒரு வாரத்தில் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என தெரிவித்த அவர், அவ்வாறு அனுமதி கிடைத்தவுடன் மூவரும் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள் எனவும் கூறினார்.

இதனை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இலங்கை தூதரகத்தால் கடவுச்சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில் அடையாள அட்டை தேவையில்லை எனக்கூறி முருகனின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

தொடர்புடையசெய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!
செய்திகள்

ஓகஸ்ட் மாதத்திற்கான அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் விசேட அறிவிப்பு!

August 17, 2026
நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!
செய்திகள்

நுவரெலியாவில் கனமழை; நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக உயர்வு!

August 17, 2026
கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!
செய்திகள்

கைதான தனியார் வங்கிகளின் 04 முகாமையாளர்களும் விளக்கமறியலில்!

August 17, 2026
கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!
செய்திகள்

கிழக்கு மாகாண புதிய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபராக சம்பத் குமார லியனகே பொறுப்பேற்பு!

August 17, 2026
சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!
செய்திகள்

சிசிலி அருங்காட்சியகத்தில் ரூ.700 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள அரிய ஓவியங்கள் கொள்ளை!

August 17, 2026
தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!
செய்திகள்

தன் உயிரை தியாகம் செய்து செல்ல நாயை காப்பாற்றிய பெண்; கொலம்பியாவில் நெகிழ்ச்சி சம்பவம்!

August 17, 2026
Next Post
கிளிநொச்சியில் இராவணனின் புஷ்பக விமானமா?;(புகைப்படங்கள் இணைப்பு)

கிளிநொச்சியில் இராவணனின் புஷ்பக விமானமா?;(புகைப்படங்கள் இணைப்பு)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு