இராவணன் பயன்படுத்தியதாக கருதப்படும் புஷ்பக விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சிங்கள முகநூல் பக்கம் ஒன்று தகவல் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் அந்த முகநூல் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கிளிநொச்சியில் அகழ்வாராய்ச்சி மூலம் தொல்பொருள் சின்னம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவை இராவணனின் பயன்படுத்தியாக கருதப்படும் நிலையில், இராவணன் பயன்படுத்திய புஷ்பக விமானத்தின் பாகங்களாக இருக்கலாம் என்று சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
இதனை ஆராய்வதற்காக ஜப்பானிய தொல்பொருள் ஆய்வாளர்கள் வருகை தரவுள்ள நிலையில்,
அவர்களோடு இலங்கை தொல்பொருள் திணைக்களமும் இணைந்து கொள்ளவுள்ளனர் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் இது தொடர்பான உண்மைத்தன்மை மற்றும் மேலதிக தகவல்கள் என்பன வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்டுள்ளது என்றும், “இராவணின் கோட்டையாக இருந்த சிகிரியா சிங்கள மரபுரிமை சின்னமாக மாறியது மட்டுமல்லாமல், இராவணன் சிங்கள மன்னன் என்று வரலாற்றை மடை மாற்றிக் கொண்டுள்ள சிங்கள பேரினவாதம் அடுத்து என்ன கதை உருவாக்க போகிறதோ?” என சமூக ஆர்வலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் கருத்து ஒன்றையும் பதிவிட்டுள்ளார்.