சர்வதேச கிரிக்கெட் பேரவையின் (ICC) தலைவராக ஜெய் ஷா இரண்டாவது தடவையாகவும் போட்டியின்றி மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்ற ஐ.சி.சி. நிர்வாகக் குழு மற்றும் குழுக்களின் கூட்டங்களைத் தொடர்ந்து, இந்த நியமனம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஐ.சி.சி. நிர்வாகக் குழுவின் உறுப்பினர்களால் போட்டியின்றி தெரிவு செய்யப்பட்டதன் மூலம் ஜெய் ஷாவின் தலைமைத்துவத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீண்டும் தலைவராக நியமிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜெய் ஷா, தன் மீது தொடர்ந்து நம்பிக்கை வைத்து ஆதரவளித்த ஐ.சி.சி. நிர்வாகக் குழு உறுப்பினர்களுக்கு நன்றியைத் தெரிவித்துள்ளார்.
மேலும், 2028ஆம் ஆண்டு அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது, இவ்விளையாட்டை உலகளவில் விரிவுபடுத்துவதற்கும் புதிய இரசிகர்களைக் கவர்வதற்கும் மிகப்பெரிய வாய்ப்பாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கிரிக்கெட்டின் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவளித்தல், உலகளாவிய ரீதியில் கிரிக்கெட்டின் வளர்ச்சியை விரிவுபடுத்துதல் ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.







