Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பூர்த்தி செய்யப்படாத கட்டிடத் தொகுதியால் கொக்கட்டிச்சோலை பாடசாலை மாணவர்களுக்கு சிரமம்!

பூர்த்தி செய்யப்படாத கட்டிடத் தொகுதியால் கொக்கட்டிச்சோலை பாடசாலை மாணவர்களுக்கு சிரமம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

உலகப் புகழ்பெற்ற கொக்கடிச்சோலை தான்தோன்றீஸ்வரர் பேராலயத்தின்அருகிலும் மிகவும் பின்தங்கிய பகுதியிலும் அமைந்துள்ளகொக்கட்டிச்சோலை இராமகிருஷ்ணன் வித்தியாலயத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் கட்டிய பாடசாலை, சிறந்த பாடசாலை என்ற விசேட திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட இருமாடிக் கட்டிடம் சுமார் 5 வருட காலமாக பூர்த்தி செய்யப்படவில்லை என அப்பிரதேச மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இப் பாடசாலை மாணவர்கள் பெரும் இடநெருக்கடியை நோக்கி இருக்கின்ற இன்றைய நிலையில் பூர்த்தி செய்யப்படாத இந்த இரு மாடிக்கட்டிடத்தை இப்பிரதேச அரசியல்வாதிகளும் அதிகாரம் படைத்தவர்களும் பூர்த்தி செய்து தர முன்வர வேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

கோடிக்கணக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த கட்டிட தொகுதி பூர்த்தி செய்யப்படாமல் மழைநீர் தேங்கி நின்று நுளம்பு பெருகி வருவதாகவும் இதேபோல பாடசாலை மாணவர்களுக்கு தேவையான கற்றல் நடவடிக்கைகளை செயற்படுத்துவதற்கு போதிய இடவசதியில்லை என்றும் இப்பகுதி பெற்றோர்கள் குறைபாடு தெரிவிக்கின்றனர் .

கல்வி பொது தராதர சாதாரண பரிட்சையில் திறமை படைத்த இப் பிரதேச மாணவர்களுக்கு மேலும் இந்த கட்டிடத்தை பூர்த்தி செய்து வளங்களை பெற்று தருவதற்கு அரசியல்வாதிகளும், அதிகாரம் படைத்தவர்களும் முன் வர வேண்டுமெனவும் இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இது தவிர மிகவும் பழமை வாய்ந்த இப்பாடசாலையில் உள்ள ஆசிரியர் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், ஏனைய புறக்கிருத்திய நடவடிக்கைகளை செயல்படுத்துவதற்கு தேவையான வசதிகளையும் பௌதிக வளங்களையும் பெற்று தருவதற்கு இந்த அரசியல்வாதிகளும், அரசாங்க அதிகாரிகளும் முன்வர வேண்டும் எனவும் வேண்டுகோள்விடுக்கின்றனர்.

இதேவேளை இக்குறைபாட்டினை நிவர்த்திக்க விரைவாக நடவடிக்கை எடுக்குமாறும் இப்பிரதேச மக்களின் கல்வி வளர்ச்சிக்குள்ள தடையினைபோக்க கூடிய கவனம் செலுத்துமாறு ஐக்கிய தேசியக்கட்சியின் மட்டக்களப்பு மாநகர சபை பிரிவின் வலய அமைப்பாளர் பீ.அப்துல் லத்தீப் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவையும் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானையும் அவசர கடிதம் மூலம் கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
21 வயது காதலியுடன் சென்ற 19 வயது மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை!

21 வயது காதலியுடன் சென்ற 19 வயது மாணவன் மாயம்; பொலிஸார் விசாரணை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு