மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் இன்று(04) மாலை அல்லது இரவு வேளையில் 75 மில்லிமீட்டருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனிடையே, நாட்டின் பல பகுதிகளிலும் அதிக வெப்பமான வானிலை நிலவுமென திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
வடக்கு, வட மத்திய, கிழக்கு, மேல், சப்ரகமுவ, வட மேல், தென் மாகாணங்களில் இவ்வாறு வெப்பம் அதிகரித்து காணப்படுமென எதிர்வுகூறப்பட்டுள்ளது.