Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸார் மீது விமானப்படை வீரர் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு!

பொலிஸார் மீது விமானப்படை வீரர் துப்பாக்கி பிரயோகம்; ஒருவர் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாதுக்கை – அங்கமுவ பகுதியில் பொலிஸாருடன் இன்று திங்கட்கிழமை (8) காலை இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரும் பொலிஸாரும் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது, பொலிஸ் வீதித் தடைக்கு அருகில், உத்தரவை மீறிசென்ற மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸாரை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதையடுத்து பொலிஸார் பதிலுக்கு மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் மோட்டார் சைக்கிளில் பயணித்தவர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் இலங்கை விமானப்படை வீரர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஹொரணை – தல்கஹவில பகுதியில் குறித்த நபர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (7) மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் இருவரை கொலை செய்தவர் என சந்தேகிப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது குறித்து இலங்கை விமானப்படையின் ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க தெரிவிக்கையில்,

இன்று காலை பாதுக்கையில், உள்ள பொலிஸ் சோதனைச் சாவடிக்கு அருகில் உள்ள விமானப்படையின் ரக்பி பகுதியில் கடமையில் இணைக்கப்பட்டிருந்த விமானப்படையின் கோப்ரல் தர வீரர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார். ஆனாலும் அவர் இன்று கடமையில் இருக்கவில்லை.

இந்த சம்பவம் குறித்து விமானப்படை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. விமானப் படை வீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டால் அதற்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!
செய்திகள்

தமிழ் – முஸ்லிம் கட்சிகளுடன் ஜனாதிபதி முக்கிய பேச்சு; அரசியலமைப்பு, மாகாண சபை தேர்தல் குறித்து கவனம்!

August 3, 2026
ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!
செய்திகள்

ஹெட்டனில் வீடு ஒன்றின் மீது மண்மேடு சரிந்து வீழ்ந்ததில் நால்வர் மாயம்!

August 3, 2026
பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!
செய்திகள்

பசுபிக் பெருங்கடலில் உருவாகும் சூறாவளி; இலங்கையில் மீண்டும் கனமழைக்கு வாய்ப்பு!

August 3, 2026
கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்
செய்திகள்

கடற்படையின் அதிரடி; 677 கிலோவுக்கும் அதிகமான கடத்தல் பீடி இலைகள் பறிமுதல்

August 3, 2026
48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு
செய்திகள்

48 மணி நேர வெள்ள எச்சரிக்கை; களனி, மகாவலி கரையோர மக்களுக்கு அறிவிப்பு

August 3, 2026
பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!
செய்திகள்

பொதுமக்கள் முறைப்பாடுகளுக்காக ‘118’ சேவை அறிமுகம்; கட்டணமின்றி தகவல் வழங்க புதிய வசதி!

August 3, 2026
Next Post
நாட்டு மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்; சஜித் நம்பிக்கை!

நாட்டு மக்களின் ஆயுட்காலத்தை அதிகரிக்க முடியும்; சஜித் நம்பிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு