இன்று (1) முதல் அமுலாகும் வகையில் எரிபொருட்களின் விலையை திருத்தியமைத்துள்ளதாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதற்கமைய, மண்ணெண்ணெய் தவிர ஏனைய எரிபொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட புதிய எரிபொருள் விலை விபரங்கள் வருமாறு:
ஒட்டோ டீசல் லீற்றர் ஒன்றின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 397ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 392).
லங்கா சுப்பர் டீசல் 4 லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 543 ஆக உயர்த்தப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 528).
பெட்ரோல் 92 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூபா 424 ஆகப் பதிவாகியுள்ளது (முந்தைய விலை: ரூ. 414).
பெட்ரோல் 95 ஒக்டேன் லீற்றர் ஒன்றின் விலை 15 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டு, அதன் புதிய விலை ரூ. 490 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது (முந்தைய விலை: ரூ. 475).
எவ்வாறாயினும், மண்ணெண்ணெய் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை. அதன்படி, லீற்றர் ஒன்று தொடர்ந்து 285 ரூபாய் என்ற நிலையிலேயே விற்பனை செய்யப்படும் என இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.

அதேசமயம் லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் எரிபொருட்களின் விலையில் திருத்தம் மேற்கொண்டுள்ளது.
அதற்கமைய, ஒக்டேன் 92 ரக பெற்றோல் மற்றும் ஒட்டோ டீசல் ஆகியவற்றின் விலைகளை இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மேற்கொண்ட தீர்மானத்திற்கு இணையாக உயர்த்தியுள்ளது.
இதன்படி ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று10 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 424 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
அத்துடன் ஒட்டோ டீசல் லீட்டர் ஒன்றுக்கு 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டு 397 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படவுள்ளது.
எவ்வாறாயினும் சுப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 30 ரூபாயினால் குறைக்கப்பட்டு 570 ரூபாயாக விற்பனை செய்யப்படும்.
இதுதவிர அண்மையில் அதிகரிக்கப்பட்ட ஒக்டேன் 95 ரக பெற்றோல் லீட்டர் ஒன்று மாற்றமின்றி 495 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என லங்கா ஐ.ஓ.சி நிறுவனம் தெரிவித்துள்ளது.







