Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு நகரில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய 14 வயது சிறுவன்!

மட்டு நகரில் பூட்டியிருந்த வீடுகளை உடைத்து கைவரிசை காட்டிய 14 வயது சிறுவன்!

3 years ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பு கொக்குவில் மற்றும் மட்டு தலைமையக பொலிஸ் பிரிவுகளிலுள்ள பிரதேசத்தில் பூட்டியிருந்த 6 வீடுகளை உடைத்து அங்கிருந்து பணம் தங்க நகைகள், மடிகணினி மற்றும் மின் உபகரணங்களை திருடிவந்த 14 வயதுடைய சிறுவன் உட்பட இருவரையும்,அந்த திருட்டு பொருட்களை வாங்கிய மேலும் 4 பேர் உட்பட மொத்தமாக 6 பேரை திங்கட்கிழமை (08.05.2023) கைது செய்துள்ளதுடன் திருடப்பட்ட பொருட்களை மீட்டுள்ளதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர்.

கொக்குவில் பொலிஸ் பிரிவிலுள்ள பனிச்சையடி பிரதேசத்தில் கடந்த முதலாம் திகதி தொடக்கம் 4 ஆம் திகதி வரை அந்த பிரதேசத்தில் தொடர்ச்சியாக பூட்டியிருந்த 4 வீடுகளின் கூரை மற்றும் யன்னல் கதவுகளை உடைத்து அங்கிருந்த 4 மடி கணினி கையடக்க தொலைபேசிகள் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான மின்சார உபகரணங்கள் திருடப்பட்டுள்ளன.

இது தொடர்பாக கொக்குவில் பொலிஸ் நிலைய பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பி. சசீந்திராவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினை அடுத்து மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் எதிரிமானவின் ஆலோசனைக்கு அமைய பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஏ.கே.யு.பி. விமலரத்தினவின் வழிகாட்டலில் சம்பவதினமான திங்கட்கிழமை பெரும் குற்றத் தடுப்பு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் கொக்குவில் பொலிஸ் நிலையத்தை அண்மித்த பகுதியைச் சேர்ந்த 14 வயது சிறுவன் மற்றும் 25 வயதுடைய ஆண் ஒருவர் உட்பட இருவரை கைது செய்தனர்.

இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில் குறித்த 4 வீட்டை உடைத்தது திருடியதுடன் மட்டக்களப்பு நகர் கண்ணகையம்மன் 7 குறுக்கு வீதியிலுள்ள பூட்டியிருந்த வீடு ஒன்றை கடந்த 5 ஆம் திகதி உடைத்து அங்கிருந்து ஒரு பவுண் தங்க சங்கிலி 3 தோடுகள், கையடக்க தொலைபேசிகள் திருடியதுடன் பார்வீதியிலுள்ள வீடு ஒன்றில் இருந்து மரம்வெட்டும் மிசார உபகரணம் மற்றும் மின்சார உபகரணங்களை திருடியதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனை அடுத்து திருடிய பொருட்களை மீட்டதுடன் திருடிய மடிகனணிகள் தண்ணீர் மோட்டர் மற்றும் தங்க நகைகளை வாங்கிய காத்தான்குடி, சத்துருக்கொண்டான், கொக்குவில் பிரதேசங்களைச் சேர்ந்த கையடக்க தொலைபேசி விற்பனை நிலையம் மற்றும் பழைய இருப்பு விற்பனை நிலையம், நகைக்கடை போன்ற கடை முதலாளிகள் 4 பேரை திருட்டுப் பொருளை வாங்கிய குற்றச்சாட்டில் கைது செய்தனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்வர்களை செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தியபோது திருட்டில் ஈடுபட்ட 14 வயது சிறுவன் உட்பட 2 பேரையும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறும் திருட்டு பொருட்களை வாங்கிய கடை முதலாளிமார்களான 4 பேரையும் நீதவான் பிணையில் விடுவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்
செய்திகள்

கல்லடி மெதடிஸ்த திருச்சபை வாலிபர்களின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம்

July 22, 2026
மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை
செய்திகள்

மட்டக்களப்பில் காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை

July 22, 2026
மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி
காணொளிகள்

மாணவிகளின் கண்ணீருடன் கலாபூசணம் பரதசூடாமணி சுபித்ரா கிருபாகரனுக்கு இறுதிஅஞ்சலி

July 21, 2026
மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!
செய்திகள்

மட்டக்களப்பில் ஹெரிட்டேஜ் குரூப் பிளான்டேஷனின் 6ஆவது கிளை திறப்பு!

July 20, 2026
வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்
செய்திகள்

வரட்சி நிவாரண குடிநீர் நிதி ஏன் நிறுத்தப்பட்டது?; அரசாங்கத்திடம் விளக்கம் கோரும் செ. நிலாந்தன்

July 20, 2026
பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்
காணொளிகள்

பறிக்கப்படும் மட்டு மீனவர்களின் வாழ்வாதாரம்

July 20, 2026
Next Post
அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெரும்பாலான தமிழர்கள்; கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவு!

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடுகடத்தப்பட்ட பெரும்பாலான தமிழர்கள்; கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைவு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.