மட்டக்களப்பு முகத்துவாரம் ஆற்றுவாய்க்கு நேராகக் காணப்படும் கரை நிலமட்டம் தெரியாத தூர கடற்பரப்பில் ஆண் ஒருவரின் சடலம் மிதப்பதை மீனவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இது குறித்த காணொளி, இன்று (25) காலை பாலமீன்மடுவிலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச்சென்ற மீனவர்களால் எங்களது ஊடகத்திற்குத் தனியாகப் பகிரப்பட்டுள்ளது. எனினும், குறித்த சடலம் கடுமையாக ஊதி காணப்படுவதுடன் மட்டக்களப்பு பொலிஸ் எல்லைக்குள் கரையை ஒதுங்குமா அல்லது ஏறாவூர், கல்லடி, காத்தான்குடியை சுற்றியுள்ள கடற்கரைப் பகுதிகளில் கரை ஒதுங்குமா என்பது இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.








