Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

மட்டக்களப்பு செட்டிபாளையத்தில் ரூ.60 இலட்சம் பெறுமதியான சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்பு; மீனவர் கைது!

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு, செட்டிபாளையம் பகுதியில் உள்ள வீடொன்றில் இருந்து சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பொலிஸார் கைப்பற்றியுள்ளதுடன், அவற்றை உடைமையில் வைத்திருந்த மீனவர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.

இந்தக் கைது நடவடிக்கை நேற்று ஞாயிற்றுக்கிழமை (25) மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்டதாக களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதைப்பொருளுக்கு எதிரான அமைப்பினருக்கு மீனவர்கள் வழங்கிய இரகசியத் தகவலின் அடிப்படையில், குறித்த தகவல் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, சம்பவ தினமான நேற்று மாலை செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றைப் பொலிஸார் முற்றுகையிட்டு சோதனையிட்டுள்ளனர்.

இதன்போது, அந்த வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 60 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சட்டவிரோத சுருக்கு வலைகள் மீட்கப்பட்டதுடன், அவற்றின் உரிமையாளரான மீனவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் நீண்டகாலமாகச் சட்டவிரோத சுருக்கு வலைகளைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளதாகப் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரும் பொலிஸாரும் முன்னெடுத்து வருகின்றனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!
செய்திகள்

அஹங்கமவில் டிப்பர் வாகனமும் பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து; ஐவர் காயம்!

October 26, 2026
35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!
செய்திகள்

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

October 26, 2026
பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!
செய்திகள்

பொலிஸாரின் உத்தரவை மீறிச் சென்ற முச்சக்கர வண்டி மீது துப்பாக்கிச் சூடு; சாரதி காயம்!

October 26, 2026
நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!
செய்திகள்

நாகொட இரட்டைக் கொலை; பிரதான துப்பாக்கிதாரி எனச் சந்தேகிக்கப்படும் 32 வயதுடையவர் கைது!

October 26, 2026
கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!
செய்திகள்

கல்விச் சீர்திருத்தங்களுக்கு அடுத்த ஆண்டு அதிக நிதி ஒதுக்கீடு; பிரதமர் ஹரிணி!

October 26, 2026
வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!
செய்திகள்

வடக்கு, கிழக்கில் வனப் பகுதிகளாக அறிவிக்கப்பட்ட காணிகள் விடுவிப்பு?; வடக்கில் புதிய வனப் பகுதிகளை அறிவிப்பதற்கும் தற்காலிகத் தடை!

October 26, 2026
Next Post
35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

35 ஆண்டுகளுக்குப் பின்னர் சொந்த இடத்தில் மீண்டும் அமைகிறது காங்கேசன்துறை தபால் நிலையம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு