Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

மட்டக்களப்பு வாவியில் முதன்முறையாக மிதக்கும் உணவகம் திறப்பு!

1 hour ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில், கல்லடியில் அமைந்துள்ள லியா கபே ஹோட்டல் நிறுவனத்தினால் அறிமுகப்படுத்தப்பட்ட மிதக்கும் உணவகப் படகு சேவை கடந்த சனிக்கிழமை (24) சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கல்லடிப் பாலத்திற்கு அருகில் அமைந்துள்ள லியா கபே ஹோட்டலின் உரிமையாளர் சரண்ராஜின் முயற்சியில், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில் இந்த மிதக்கும் உணவகச் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதன் ஆரம்ப நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா. சிறிநேசன் மற்றும் மட்டக்களப்பு மாநகர சபை முதல்வர் சிவம் பாக்கியநாதன் ஆகியோர் இணைந்து நாடா வெட்டி மிதக்கும் உணவகப் படகு சேவையை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தனர்.

இந்நிகழ்வில் மாநகர சபையின் பிரதி முதல்வர், மாநகர சபை உறுப்பினர்கள், வர்த்தகர்கள், மட்டக்களப்பு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களப் பணிப்பாளர், மாவட்ட சுற்றுலாத்துறைப் பணிப்பாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

மட்டக்களப்பு வாவியின் இயற்கை அழகை ரசித்தவாறு உணவு அருந்தும் அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த மிதக்கும் உணவகப் படகில் ஒரே நேரத்தில் 40 பேர் பயணித்து உணவருந்த முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படகு சேவை குறிப்பிட்ட சில கட்டுப்பாடுகளின் கீழ் முன்னெடுக்கப்படவுள்ளதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதற்கமைய, படகில் மதுபானம் அருந்துவதற்கும் புகைப்பிடிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், வெளியில் இருந்து உணவுப் பொருட்களைக் கொண்டுவருவதற்கும் அனுமதி இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு வாவியின் இயற்கை வளங்களையும் அழகையும் சுற்றுலாப் பயணிகளுக்கு புதிய அனுபவமாக அறிமுகப்படுத்தும் இந்த முயற்சி, பிரதேசத்தின் சுற்றுலாத்துறை வளர்ச்சிக்கு பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை
செய்திகள்

நௌபர் மௌலவி உள்ளிட்ட இருவருக்கு 12 ஆண்டுகள் கடூழிய சிறை தண்டனை

October 26, 2026
சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!
செய்திகள்

சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

October 26, 2026
மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு
காணொளிகள்

மட்டக்களப்பில் சுருக்கு வலை பாவித்து மீன் பிடிக்கும் நபர்களின் பெயர் விபரங்களை வெளியிட்டது ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு

October 26, 2026
களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

களு கங்கையை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயம்; 24 மணித்தியாலங்களுக்கு எச்சரிக்கை!

October 26, 2026
கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ.5.1 கோடி பெறுமதியான ‘குஷ்’ போதைப்பொருளுடன் இந்தியப் பிரஜை கைது!

October 26, 2026
கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!
செய்திகள்

கனமழையால் நான்கு நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறப்பு; தாழ்நிலப் பகுதிகளில் வசிப்போருக்கு எச்சரிக்கை!

October 26, 2026
Next Post
சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

சீரற்ற வானிலை; பாடசாலைகளை மூடுவது தொடர்பான தீர்மான அதிகாரம் மாகாணக் கல்வி அதிகாரிகளுக்கு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு