Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சாய்ந்தமருது மாலை நேர கடைகள் சுற்றி வளைப்பு; புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு!

சாய்ந்தமருது மாலை நேர கடைகள் சுற்றி வளைப்பு; புற்றுநோயை உண்டாக்கும் சுவையூட்டிகள் கண்டுபிடிப்பு!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள் மீது கடந்த சில தினங்களாக திடீர் சோதனை நடவடிக்கையை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷத் காரியப்பரின் தலைமையிலான சுகாதார குழுவினர் முன்னெடுத்து வருகின்றனர்.

சுகாதாரமற்ற உணவுகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து உணவுப் பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீன் அவர்களின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது பிரதேச இரவு நேர உணவகங்கள், டேஸ்ட் கடைகள், கோழி பதப்படுத்தி விற்கும் இடங்கள் போன்றவற்றில் நேற்று (16) இரவு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

கடந்த காலங்களில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்கள், சந்தை, சில்லறை கடைகள், மொத்த விற்பனை நிலையங்கள், சிறிய சூப்பர் மார்க்கட்கள் போன்றவற்றை பார்வையிட்ட அவர் உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும் உணவங்கள் சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்திருந்ததுடன் எச்சரிக்கையும் விடுத்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம். ஜெரின், காரியாலய உத்தியோகத்தர் எம்.எச்.எம். பிர்தௌஸ் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும் நிலையங்கள் மீது திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று மாலை நேர உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள், பாவனைக்கு பொருத்தமற்ற எண்ணெய்கள் மற்றும் புற்றுநோயை உண்டாக்கும் தன்மை கொண்ட சுவையூட்டிகள், கலப்படம் செய்யப்பட்ட சுவையூட்டிகள் போன்ற பொருட்கள் கைப்பற்றப்பட்டது.

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற, முறையான களஞ்சிய வசதி இல்லாத மற்றும் பழுதடைந்த உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் பழுதடைந்த உணவுகள் கைப்பற்றப்பட்டது. அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்
செய்திகள்

போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை விதிப்பது குறித்துக் கலந்துரையாடல்

August 10, 2026
ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்
செய்திகள்

ஈஸ்டர் தாக்குதல் சூத்திரதாரிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும்-ஆனால் மரண தண்டனையை ஏற்கமுடியாது; கர்தினால் மெல்கம் ரஞ்சித்

August 10, 2026
சாகர காரியவசம் பிணையில் விடுதலை
செய்திகள்

சாகர காரியவசம் பிணையில் விடுதலை

August 10, 2026
வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ
செய்திகள்

வசீம் தாஜுதீன் கொலையில் எனது பெயர் பொய்யாகவே இணைக்கப்பட்டது; நாமல் ராஜபக்‌ஷ

August 10, 2026
புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!
செய்திகள்

புத்தளத்தில் 7,000 வெளிநாட்டு சட்டவிரோத சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!

August 10, 2026
கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!
செய்திகள்

கல்முனை வைத்தியசாலையில் பர்தா விவகாரம்; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்படும்!

August 10, 2026
Next Post
மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை’ பெறும் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும்; சிறிநேசன் தெரிவிப்பு!

மக்கள் மத்தியில் அதிக வாக்குகளை' பெறும் தமிழர் ஒருவரை பொது வேட்பாளராக தெரிவு செய்ய வேண்டும்; சிறிநேசன் தெரிவிப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.