கடற்றொழிலுக்குச் சென்ற நிலையில், படகின் வெளிஇணைப்பு இயந்திரம் பழுதடைந்ததால் தமிழக கடற்பரப்பில் தத்தளித்துக் கொண்டிருந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இரண்டு மீனவர்கள் இந்திய கடலோரக் காவல் படையினரால் மீட்கப்பட்டுள்ளனர்.
யாழ்ப்பாணம் மூன்றாம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த ஜெனோஜன் மற்றும் டிவோஜன் ஆகிய இரு இளைஞர்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட இருவரும் தற்போது தமிழகத்தின் மண்டபம் பகுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக இந்திய கடலோரக் காவல் படை தகவல்கள் தெரிவிக்கின்றன.







