காலி மாவட்டத்தின் உனவட்டுன பகுதியில் ஐஸ் மற்றும் குஷ் போதைப்பொருட்களுடன் 41 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
காலி மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
உனவட்டுன பகுதியைச் சேர்ந்த குறித்த நபரிடமிருந்து 134 கிராமுக்கும் அதிகமான ஐஸ் போதைப்பொருளும், 125 கிராமுக்கும் அதிகமான குஷ் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்கள் தொடர்பிலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் தொடர்பிலும் மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.








