ஐஸ் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவர் கிராண்ட்பாஸ் பொலிஸ் அதிகாரிகளின் பாதுகாப்பில் மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போது பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அவிசாவளை பிரதேசத்தைச் சேர்ந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
இவர் ஏனைய சந்தேக நபர்களுடன் மாளிகாகந்த நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட போதே பொலிஸ் பாதுகாப்பில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாக சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் மேலும் தெரிவித்தார்.