Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இன்று முதல் ஆரம்பமாகும் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பொருள் வழங்கி வைப்பு திட்டம்!

இன்று முதல் ஆரம்பமாகும் பாடசாலை மாணவர்களுக்கான உணவுப் பொருள் வழங்கி வைப்பு திட்டம்!

2 years ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

பாடசாலை மாணவர்களுக்கான போசாக்குத் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களை பாடசாலைகளுக்கு வழங்கும் பணிகள் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் இந்த நடவடிக்கை இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டன. பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படுவதுடன்,
ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன் முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும்இந்தப் பணிகள் தொடரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலைகளுக்கான புதிய தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.8 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் என்பன பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தரம் 1 தொடக்கம் 5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. தினமும் காலை 7.30 மணி தொடக்கம் 8.30 மணி வரை காலை உணவு வழங்கப்படுகிறது. இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
Next Post
களுவாஞ்சிகுடியில் வியாழேந்திரனின் தலைமையில் வீதிகள் திறப்பு!

களுவாஞ்சிகுடியில் வியாழேந்திரனின் தலைமையில் வீதிகள் திறப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு