Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காதலியின் திருமண செய்தி கேட்ட காதலன் உயிரிழப்பு!

காதலியின் திருமண செய்தி கேட்ட காதலன் உயிரிழப்பு!

2 years ago
in செய்திகள்

காதலிக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட நிலையில், காதலன் விசமருந்தி உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தில் இடம்பெற்ற இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

சேலம் மாவட்டம் அயோத்தியாப்பட்டணம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். இவருடைய மகன் பிரகாஷ் (வயது 27). இவர், அந்த பகுதியை சேர்ந்த இளம்பெண்ணை கடந்த 2 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பெண்ணின் வீட்டிற்கு சென்று திருமணம் செய்து கொடுக்க பெரியவர்கள் மூலம் பிரகாஷ் கேட்டதாக கூறப்படுகிறது. அப்போது, வீடு கட்டி முடியுங்கள், அதன்பிறகு பார்க்கலாம் என காதலியின் பெற்றோர் கூறியதாக தெரிகிறது.

இதனால் சொந்தமாக வீடு கட்டும் பணியில் பிரகாஷ் ஈடுபட தொடங்கினார். மேலும் காதலியை திருமணம் செய்து வைக்க பிரகாஷ் தனது பெற்றோரிடம் மீண்டும் வற்புறுத்தி வந்துள்ளார்.

எனினும் இளைஞனின் பெற்றோர் காலதாமதம் செய்து வந்ததாக கூறப்படுகிறது. அதே நேரத்தில் வேறு இடத்தில் அந்த பெண்ணுக்கு அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது.

காதலிக்கு இன்னொருவருடன் திருமணம் நடக்கவிருந்ததை அறிந்த இளைஞன் விரக்தி அடைந்து (20) சனிக்கிழமை மதியம் பூச்சிக்கொல்லி விஷ மாத்திரைகளை சாப்பிட்டு வீட்டில் மயங்கி கிடந்தார்.

இதையறிந்த உறவினர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச்சென்ற நிலையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் சிகிச்சை பலனின்றி பிரகாஷ் இறந்தார். சம்பவம் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வரும் நிலையில் காதலால் இளைஞர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்
செய்திகள்

மட்டக்களப்பில் மகாத்மா காந்தியின் ஜனனதின நிகழ்வுகள்

October 2, 2026
வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்
செய்திகள்

வவுணதீவில் குற்றவாளிகளுடன் மது அருந்திய பொலிஸ் கொஸ்தாப்பர் பணியில் இடைநீக்கம்

October 2, 2026
50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி
செய்திகள்

50க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளை மூட அரசாங்கத்திற்கு உரிமை உள்ளதா?; ஜோசப் ஸ்டாலின் கேள்வி

October 2, 2026
Next Post
இன்று இரவு வானில் தென்படவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

இன்று இரவு வானில் தென்படவுள்ள அரிய காட்சி; இலங்கையர்களுக்கும் வாய்ப்பு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு