Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பு!

2 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை (திருத்த) சட்டமூலம் ஆகிய இரண்டும் இன்று (18) நாடாளுமன்றத்தில் முதல் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்படவுள்ளன.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நானயக்காரவினால் குறித்த சட்டமூலங்கள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

22ஆவது அரசியலமைப்புத் திருத்தம் நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 65இலிருந்து 67ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 63இலிருந்து 65ஆகவும் அதிகரிக்கப்படும்.

அதேவேளை, நீதித்துறை (திருத்த) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், உயர் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றம் மற்றும் நீதிவான் நீதிமன்றங்களில் பணியாற்றும் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயது 62 ஆக நிர்ணயிக்கப்படும்.

இந்நிலையில், குறித்த இரண்டு சட்டமூலங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கும் போது எதிர்ப்பு தெரிவிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று (17) நடைபெற்ற எதிர்க்கட்சி நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சட்டமூலங்களுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனுக்களைத் தாக்கல் செய்வதுடன், அவற்றை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள உயர் நீதிமன்றத்தின் அனைத்து 13 நீதிபதிகளையும் உள்ளடக்கிய முழு அமர்வை நியமிக்குமாறும் கோரிக்கை விடுக்க எதிர்க்கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்
செய்திகள்

சோள இறக்குமதி தாமதம்; கோழி இறைச்சி மற்றும் முட்டை விலை உயர்வு அபாயம்

October 3, 2026
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு
செய்திகள்

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் வாகன டயர்களுக்கு புதிய கட்டுப்பாடு

October 2, 2026
சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை
செய்திகள்

சுரேஷ் சலேவை மருத்துவமனையில் இருந்து வெளியேற்ற முடியாது என அறிக்கையில் கையெழுத்திட்ட 10 மருத்துவர்களுக்கு அழைப்பாணை

October 2, 2026
அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை
செய்திகள்

அனோஜனின் விடுதலைக்காக மகாநாயக்க தேரர்களும் கோரிக்கை

October 2, 2026
மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது
செய்திகள்

மினுவாங்கொடை மாவட்ட நீதவான் நீதிமன்றத்தின் பதிவாளர் கைது

October 2, 2026
இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்
செய்திகள்

இலஞ்சமாக கோழி இறைச்சி கேட்ட பொலிஸ் அதிகாரி இடைநிறுத்தம்

October 2, 2026
Next Post
சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபைக்கு புதிய தலைவர் நியமனம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு