Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாகரை பிரதேச செயலகம் முன்பாக பொது மக்கள் போராட்டம்!

வாகரை பிரதேச செயலகம் முன்பாக பொது மக்கள் போராட்டம்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

வாகரைப் பிரதேசத்தில் அபிவிருத்தி என்ற போர்வையில் மேற்கொள்ள திட்டமிடப்படும் இறால் வளர்ப்பு திட்டம் மற்றும் இல்மனைட் தொழிற்சாலையை முற்றாக தடை செய்யக்கோரிய கவனயீர்ப்பு போராட்டம் இன்று (22) வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பக மேற்கொள்ளப்பட்டது.

வாகரை பிரதேச பொது மக்களினால் இவ் போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

இன்று காலை கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலகத்திற்கு முன்பாக ஒன்று கூடிய மக்கள் கையில் பதாதைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

‘இல்மனைட் அகழ்வை முற்றாக தடை செய’;, ‘சூழலை பாதிக்கும் இறால் வளர்ப்பு திட்டம் நமக்கு வேண்டாம்.’ ‘அகழாதே,அகழாதே,எம் மண்ணை அகழாதே,’ ‘வெளியேறு வெளியேறு கொள்ளையர்களே வெளியேறு,’ ‘இயற்கை வளங்களை அழிக்கும் செயல் திட்டங்கள் நமக்கு வேண்டாம்’ என்பன போன்ற வாசகங்களை எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.

இதேவேளை பிரதேச செயலக பிரதான நுழை வாயில் கதவினை பூட்டியவாறு எவரும் உள்ளே செல்லாத வகையில் போராட்டம் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் கிழக்கு மாகாண ஆளுநர் ஆகியோர்கள் சம்பவ இடத்திற்கு உடனடியாக வருகை தந்து நல்லதொரு பதில் தரவேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.இதன்போது கோறளைப்பற்று வடக்கு வாகரை பிரதேச செயலாளர் எந்திரி ஜீ. அருணன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் கலந்துரையாடலை மேற்கொண்டிருந்தார்.

தாம் பதவிக்கு வந்தது முதல் இவ்வாறான செயற்பாட்டிற்கு புதிதாக எதுவிதமான அனுமதியும் வழங்கவில்லை என்றும் இனியும் வழங்கப் போவதில்லை என்று தெரிவித்தார்.மேலும் இல்மனைட் அல்செமி கெவி மெட்டல் கம்பனியால் தனக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று அரசாங்க அதிபர் போராட்டத்தில் ஈடுபட்டோர் மற்றும் பிரதேச சிவில் அமைப்புக்களை சந்தித்து மேற்படி விடயங்கள் தொடர்பான நேரடி கலந்துரையாடலை மேற்கொள்ளவுள்ளதாக அரசாங்க அதிபர் தரப்பில் பதில் கூறப்பட்டது.

இதே போன்று கிழக்கு மாகாண அளுநர் உத்தியோக பூர்வ விஜயமொன்றினை மேற்கொண்டு வெளிநாட்டிற்கு சென்றுள்ளதால் இன்று சமூகம் தர முடியாமல் உள்ளதாக அளுநர் தரப்பில் பதில் கூறப்பட்டது. மேற்படி விடயங்களை செவி மடுத்த போராட்டத்தில் ஈடுபட்டோர் தொடர்ந்து தங்களது கோரிக்கையை வலியுறுத்தி போராட்டத்தை மேற்கொண்டதன் பின்னர் அவ்விடத்தினை விட்டு கலைந்து சென்றனர்.

வாகரை பிரதேச மக்கள் மேற்படி நடவடிக்கைகளுக்கு எதிராக அடிக்கடி பல்வேறு வகையான போராட்டங்களை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு
காணொளிகள்

மயிலத்தமடு மற்றும் மாதவணையில் பண்ணையாளர்களுக்கு நெருக்கடி அதிகரிப்பு

October 2, 2026
யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித ராஜபக்ஷவுக்கு எதிரான பணமோசடி வழக்கு ஒத்திவைப்பு!

October 2, 2026
ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!
செய்திகள்

ஒரு ஆண்டில் 9,000க்கும் மேற்பட்ட சிறுவர்கள், இளைஞர்கள் போதைப்பொருள் வழக்கில் கைது!

October 2, 2026
எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!
செய்திகள்

எரிபொருள் விலை உயர்வு முழுச் சுமையும் மக்கள் மீது சுமத்தப்படவில்லை!

October 2, 2026
திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு;  நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!
செய்திகள்

திலீபன் சிலை அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு; நல்லூரில் 3ஆவது நாளாக போராட்டம்!

October 2, 2026
நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!
செய்திகள்

நாளை நாடு முழுவதும் மதுபான விற்பனை நிலையங்கள் மூடல்!

October 2, 2026
Next Post
தீர்மானம் எட்டப்படாவிட்டால் போராட்டங்கள் வலுப்பெறும்; செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

தீர்மானம் எட்டப்படாவிட்டால் போராட்டங்கள் வலுப்பெறும்; செந்தில் தொண்டமான் எச்சரிக்கை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.