Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடாத்திய சாணக்கியன்!

மட்டக்களப்பில் பிரித்தானிய உயர்ஸ்தானிகருடன் பேச்சுவார்த்தை நடாத்திய சாணக்கியன்!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

முதல் முதலாக நேற்றுமுன் தினம் 29.04.2024 பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அவர்கள் ஓர் சிறப்பு விஜயம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பை பிரதினுவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர் என்னும் வகையில் அவருக்கும் எனக்குமான தனிப்பட்ட சந்திப்பொன்று இடம் பெற்றது. இதன்போது மாவட்ட மற்றும் தேசியப் பிரச்சனைகள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்ட மக்கள் நேரடியாக முகம் கொடுக்கும் பிரச்சினைகளான மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் பிரச்சனை. கனிய வளங்களான இல்மனைட் அகழ்வு இறால் வளர்ப்பு திட்டம் சம்பந்தமான சமூக மற்றும் சுற்றுச்சூழல் ரீதியிலான பிரச்சனைகள் மற்றும் சட்டவிரோத காணி அபகரிப்பு சட்ட விரோதமான மீன்பிடி தொடர்பான பிரச்சனைகள் தொடர்பாகவும் கலந்தாலோசிக்கப்பட்டது.

மட்டக்களப்பு சார்ந்த விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் விவசாய ஆரம்பக் கொடுப்பனவானது பொலன்நறுவை எனும் இடத்தினை சார்ந்தே இங்கு கொடுக்கப்படுகின்றது ஆனால் இங்கு பயிரிடப்படும் போகங்கள் வித்தியாசமானதாகும். பல நேரங்களில் போகம் முடியும் தருவாயில் பணம் கொடுக்கின்றார்கள். உரத்துக்கான கொடுப்பனவும் இவ்வாறே நிகழ்கின்றது.

எமது மூலோபாய வாழ்வாதாரமான விவசாயம் மீன்பிடி கால்நடை இவை மூன்றுமே இங்கு பாரிய பிரச்சினை களை எதிர்நோக்குகின்றது என்பதையும் வலியுறுத்தியுள்ளேன். இதனால் எமது மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மிகப் பின்னடைந்து காணப்படுகின்றது.

தேசிய ரீதியில் எடுத்துக்கொண்டால் எமது மக்களுக்கு அதிகாரப்பகிர்வு இல்லாமையே இவ்வாறான சிக்கல்களையும் பாரிய சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. எமக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்குமிடத்து வட கிழக்கை செழிப்புறும் பிரதேசமாக மாற்ற எம்மால் முடியும். மற்றும் எம்மால் எம் மக்களுக்கு தேவையான முடிவுகளை மேற்கொள்ள முடியும். வாழ்வாதாரத்தையும் கட்டியெழுப்ப முடியும். எமது மக்களுக்கான அதிகாரப் பகிர்வு கிடைக்க சர்வதேச பலம் பொருந்திய நாடுகள் அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

மற்றும் TRC – Truth, Unity and Reconciliation Commission உண்மைக்கும் ஒற்றுமைக்குமான நல்லிணக்க ஆணைக்குழு சம்பந்தமாக நிலை கால சட்டம் சம்பந்தமான விடயங்களிலும் அரசாங்கம் எம்மை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டு வருகின்றது என்பதனையும் வலியுறுத்திக் கூறினேன். மற்றும் சமகால அரசியல் தொடர்பான பல விடையங்கள் ஆராயப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு
செய்திகள்

ஈரோஸ் கட்சியுடன் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் கட்சி இணைந்து செயற்பட முடிவு

September 17, 2026
சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது
செய்திகள்

சில வாகனங்களின் விலை 10 இலட்சம் ரூபாய் வரை குறைந்தது

September 17, 2026
கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாண காணி ஆக்கிரமிப்புகளைத் தடுக்க விசேட குழு தீவிர நடவடிக்கை

September 17, 2026
வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி
செய்திகள்

வாகரை பிரதேச சபையின் ஏற்பாட்டில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு உதவி

September 17, 2026
சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
Next Post
500 ரூபா வரை டொலரின் பெறுமதி உயர்வடையும்; வெளியாகியுள்ள தகவல்!

500 ரூபா வரை டொலரின் பெறுமதி உயர்வடையும்; வெளியாகியுள்ள தகவல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு