நியூகாஸில், தர்ஸ்டன் வீதியிலுள்ள வீடொன்றில் கத்திக்குத்து தாக்குதலுக்கு இலக்காகி பத்து வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.
இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் 17 வயது சிறுமி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
நேற்று மாலை 4 மணியளவில் கிடைத்த தகவலின் பிரகாரம் பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் சிறுமி பலத்த கத்திக்குத்து காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஆம்புலன்ஸ் மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் பலனின்றி அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
குடியிருப்பில் வசிக்கும் 17 வயதுடைய ஒரு பெண் கைது செய்யப்பட்டு பெல்மாண்ட் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
“சமூகத்தில் கத்தியால் குத்துவது பலமான பிரச்னையாக உருவெடுத்துள்ளது” என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த சிறுமியும், கைது செய்யப்பட்ட சிறுமியும் ஒருவரையொருவர் அறிந்திருப்பது காவல்துறையின் முதற்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.