Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தல்!

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டும்; வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தல்!

1 year ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மாணவர் போசாக்கின்மைக்கு வறுமை காரணம் அல்ல உணவு முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியம் என வேலணை பிரதேச செயலாளர் சிவகரன் வலியுறுத்தியுள்ளார்.

கல்வி மட்டும் ஒரு பிள்ளைக்கு ஆரோக்கியமான வாழ் நிலை மட்டத்தை கொடுத்துவிடாது. கல்வியுடன் விளையாட்டும் இணைந்தே அந்தப் பிள்ளையை பூரணமடைந்தவனாக உருவாக்குகின்றது என சுட்டிக்காட்டிய தீவகம் தெற்கு வேலணை பிரதேச செயலாளர் கைலாயபிள்ளை சிவகரன் போசாக்கு மட்டமே ஒரு பிள்ளையின் கல்வியையும் விளையாட்டு துறையையும் நிர்ணயிக்கின்றது என்றும் சுட்டிக்காடியுள்ளார்.

வேலணை மத்திய கல்லுரியின் வருடாந்த விளையாட்டு திறமை காண் நிகழ்வு பாடசாலையின் முதல்வர் அன்ரன் ரோய் தலைமையில் கடந்த 30.04.2024 செவ்வாய்க்கிழமை நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களை வழங்கி சிறப்பித்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வேலணைப் பிரதேசத்தின் மாணவர் மத்தியிலான போசாக்கின்மைக்கு வறுமை ஒருபோதும் காரணமாக இருக்காது. அவர்கள் உண்ணும் உணவின் தரங்கள் அல்லது பழக்கங்கள் தான் அதற்கு முழுமையான காரணமாகின்றது என தெரிவித்துள்ளார்.

அத்துடன் இந்த நிலைக்கு பெற்றோரே முக்கிய பொறுப்பானவர்களாகவும் இருக்கின்றனர். ஏனெனில் இப்பிரதேசத்தின் மாணவர் இடையே போசாக்கு மட்டத்தை அறிந்து கொள்ளும் வகையில் பிரதேச செயலகத்தால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் வெளியான தகவல் எம்மை ஆச்சரியமடைய செய்துள்ளது.

குறிப்பாக அந்த ஆய்வின்படி பாதிக்கப்பட்ட 90 வீதத்துக்கும் அதிகமான பிள்ளைகளின் பெற்றோர் வறுமைக்கோடின் கீழ் அல்லாத நிரந்தர வருமானம் கொண்டவர்களாகவும் பணம் படைத்தவர்களாகவுமே இருந்துள்ளனர். குறித்த ஆய்வின் பெறுபேறுகளுக்கமைய அவர்களது உணவுப் பழக்கவழக்கங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகியுள்ளதை அறிய முடிந்தது.

இதனடிப்படையில் பணம் இருக்கின்றது என்பதற்காக ஆடம்பரமான ஆரோக்கியமற்ற உணவுகளை உண்பதால் பயனில்லை என்பதும் உறுதியாகியுள்ளது. அத்துடன் பிள்ளைகளின் ஆரோக்கியத்தை வளர்க்க பெற்றோர் தமது அவசர உணவு பழக்க வளக்கத்தில் மாற்றத்தை கொண்டுவருவதும் அவசியமாக உள்ளது.

அந்தவகையில் பிள்ளைகளின் கல்வித் தரநிலையையும் விளையாட்டு உள்ளிட்ட ஏனைய செயற்பாடுகளையும் ஆரோக்கியமான உடற்கட்டமைப்பையும் நிர்ணயிப்பது ஊட்டச்சத்துள்ள உணவுப் பழக்க வழக்கமாகவே உள்ளது.

அதனடிப்படையில் பிள்ளைகளின் ஆரோக்கியத்தில் ஒவ்வொரு பிள்ளைகளினதும் பெற்றோர் முழுமையான பங்கெடுப்பது அவசியம்.

இதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடுவதும் அவசியம் . அதே நேரம் விளையாட்டை விளையாட்டாக விளையாடாதிருப்பதும் அவசியமானது அந்தவகையில் இந்த விளையாட்டு திறமைகாண் நிகழ்வானது வெற்றி பெறுவதற்காக மடுமல்ல கூட்டிணைந்த உறவுகளுடன் கூடிய சிறந்த மனப்பாங்கையும் உருவாக்கிக் கொள்ளும் களமாக அமைந்துள்ளது என்றும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை
செய்திகள்

ஜனாதிபதி பொதுமன்னிப்பு பட்டியலில் இல்லாத பலர் விடுவிப்பு; சி.ஐ.டியினர் விசாரணை

June 8, 2025
24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்
செய்திகள்

24 மணி நேர அடையாள வேலைநிறுத்தத்தை முன்னெடுக்கவுள்ள கால்நடை வைத்தியர்கள் சங்கம்

June 8, 2025
பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு
செய்திகள்

பிரபாகரன் தமது தேசியத் தலைவர் என்று அர்ச்சுனா குறிப்பிடுவதற்கு சரத் வீரசேகர எதிர்ப்பு

June 8, 2025
காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு
செய்திகள்

காத்தான்குடியில் காணாமல் போன சிறுவன் சடலமாக மீட்பு

June 8, 2025
தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு
செய்திகள்

தெஹிவளை மிருகக்காட்சிசாலையில் 500,000 இலட்சத்திற்கும் அதிக பெறுமதிகொண்ட பஞ்சவர்ணக் கிளி திருட்டு

June 8, 2025
மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு
காணொளிகள்

மட்டு புன்னைச்சோலை அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளியம்மன் ஆலய மஹா கும்பாபிஷேக நிகழ்வு

June 8, 2025
Next Post
அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு; வெளியான உண்மை!

அமெரிக்காவில் பாடசாலை மாணவனின் மீது பொலிஸார் துப்பாக்கி சூடு; வெளியான உண்மை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு