மத்திய மேற்கு மற்றும் அதனை அண்மித்த வங்காள விரிகுடா கடற்பகுதியில் முரசு புயல் உருவாகியுள்ளதால், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
இதன்படி, கற்பிட்டியிலிருந்து மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையான கடற்பகுதிகளில் சிறிய படகுகளில் மீன்பிடியில் ஈடுபடுவோர் மறுஅறிவித்தல் வரை கடலுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே கடலில் உள்ள சிறிய படகுகள் பாதுகாப்பான பகுதிகளுக்கோ அல்லது கரைக்கோ உடனடியாகத் திரும்புமாறும், ஏனைய பகுதிகளில் உள்ள மீனவர்கள் வானிலை நிலைமைகள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், கடலுக்குச் செல்லும்போதும் மீன்பிடியில் ஈடுபடும்போதும் உயிர்காக்கும் அங்கிகளை (Life Jackets) கட்டாயம் அணியுமாறும், வளிமண்டலவியல் மற்றும் கடற்றொழில் திணைக்களங்களின் அறிவித்தல்களைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.








